தமிழகம்
தமிழகம் வர தடை: பறவைக் காய்ச்சலால் கேரளாவில் இருந்து கோழி, வாத்து உள்ளிட்டவைகளை தமிழகம் கொண்டு வர தடைவிதிப்பு.
கேரளாவின் ஆலப்புழா, கோட்டயத்தில் பரவிய பறவைக் காய்ச்சல் தமிழகத்துக்குள் வராமல் தடுக்க நடவடிக்கை.
கோழி, வாத்துகளின் முட்டை, இறைச்சி, தீவனங்களைக் கொண்டு வரும் வாகனங்களை திருப்பியனுப்பவும் உத்தரவு.
கேரள எல்லையில் உள்ள 6 மாவட்டங்களில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தவும் கால்நடைத்துறை இயக்குநர் உத்தரவு.
பிறந்தநாள் :திமுக எம்.பி., கனிமொழி தனது 53 ஆவது பிறந்தநாளையொட்டி முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நினைவிடத்தில் மரியாதை.
ஆய்வு :சென்னை எம்ஜிஆர் நகர் அரசு மேல்நிலைப் பள்ளியில் வகுப்பறைகள், கழிப்பறைகள் மற்றும் மைதானத்தை பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன் ஆய்வு செய்தார். பொங்கலுக்கு பிறகு 10,12ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகளை திறக்கலாமா என்பது பற்றி முடிவு செய்ய நேரில் ஆய்வு என தகவல்.
பெற்றோரின் கருத்தை கேட்டறிந்து பள்ளிகள் திறப்பு பற்றி முடிவெடுக்கப்படும்- பள்ளிக்கல்வி இயக்குநர்.
விபத்து :திருத்தணி அருகே தனியார் ஆயத்த ஆடை தொழிற்சாலைக்கு சொந்தமான பேருந்து கவிழ்ந்து விபத்து. 30 தொழிலாளர்கள் காயம்
வானிலை நிலவரம் :சென்னை, காஞ்சிபும், திருவள்ளூர் மாவட்டங்களின் பல பகுதிகளில் நள்ளிரவில் இருந்து கனமழை பெய்து வருகிறது. காலையிலும் மழை தொடர்ந்து வருவதால், அலுவல் உள்ளிட்ட அன்றாட பணிகளுக்குச் செல்வோர் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். இதனிடையே, சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று பகல் மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் அடுத்த 4 மணிநேரத்திற்கு மழை தொடரும். நாகை, திருவாரூர், கடலூர் உள்ளிட்ட கடலோர மாவட்டங்களிலும் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குளிக்க தடை :குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் 2 வது நாளாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனால் குற்றாலத்தில் உள்ள மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், புலியருவி ஆகிய அனைத்து அருவிகளிலும் தண்ணீர் நன்றாக விழுகிறது.
இந்தியா:
ரூ.3000 கோடி திட்டம் கொச்சி-மங்களூரு இடையே குழாய்வழி கேஸ் விநியோகத்தை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்
டெல்லியில் இருந்து காணொலி மூலம் 450 கி.மீ. வரை குழாய்வழி கேஸ் இணைப்பை தொடங்கி வைக்கிறார்
ஒரே நாடு, ஒரே கேஸ் விநியோக அமைப்பு நோக்கத்தில் ரூ.3,000 கோடியிலான திட்டம் இன்று தொடக்கம்.