திருவள்ளூர்: தேசிய அளவில் வேலைவாய்ப்பு பெற பல்கலைக்கழக விளையாட்டாக சிலம்பாட்டத்தை அங்கீகரிக்க மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் தர வேண்டும் என அதன் பயிற்சியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்,
திருவள்ளூர் ஜூலை:30,
சிலம்பம் தமிழர்களின் தற்காப்பு கலை மட்டுமல்ல, அவர்களின் பாரம்பரிய வீர விளையாட்டும் ஆகும். பல்லாயிரம் ஆண்டுகள் தொன்மை வாய்ந்த இந்த வீர விளையாட்டு துப்பாக்கி, பீரங்கி போன்ற ஆயுதங்கள் பயன்பாட்டிற்கு வருவதற்கு முன்பாக யுத்த களத்தில் எதிரிகளை வீழ்த்த தமிழர்கள் கையாண்ட வரலாற்று சிறப்புமிக்க இந்த வீர விளையாட்டிற்கு உலகலாவிய அளவில் அங்கீகாரம் கிடைக்காதது தமிழர்களுக்கான ஏமாற்றும் மட்டுமல்ல தமிழகத்திற்கு ஏற்பட்டுள்ள அவமானமும் தான் என்று வேதனை தெரிவித்துள்ள சிலம்ப பயிற்சியாளர்கள்,
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு கழகம் வேலைவாய்ப்பில் 3 சதவீத இட ஒதுக்கீடு. இதேபோன்று மத்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் அங்கீகாரம் வழங்க வேண்டும். தற்போது இந்திய பள்ளி விளையாட்டு குழுமம் நடத்தும் தேசிய அளவிலான போட்டிக்கு மட்டுமே அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதில் பள்ளி மாணவர்கள் மட்டுமே பங்கேற்க முடியும். உயர்கல்வி மாணவர்கள் பங்கேற்க வேண்டும். என்றால் பல்கலைக்கழக விளையாட்டாக சிலம்பாட்டத்தை மத்திய அரசு அங்கீகரிக்க வேண்டும். தமிழ்நாடு சிலம்பாட்டக் கழகம் 1980 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது இதன் மூலம் கல்விக்கான இட ஒதுக்கீடு மட்டுமே வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது தமிழக அரசு 3% வேலை வாய்ப்புக்கான இட ஒதுக்கீட்டிலும் சிலம்பத்தி ற்க்கு இடம் அளிப்பது தொடர்பாக பரிசீலனை செய்து வருகிறது. தமிழ்நாடு சிலம்பாட்டக் கழகம் மட்டுமே தமிழக அரசின் அங்கீகாரத்தை பெற்றுள்ளது. இதேபோன்று பல்வேறு பெயர்களில் போலி அமைப்புகள் உருவாகி சிலம்பாட்ட போட்டிகள் நடத்தி அதன் மூலம் மாணவர்களிடம் வசூல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றன, இதன் காரணமாகவே இந்திய விளையாட்டு ஆணையத்தின் அங்கீகாரம் கிடைக்காமல் சிலம்பாட்டம் வீரர்கள் ஏமாற்றம் அடைகின்றனர். இதில் மாநில அரசு தனிக்கவனம் செலுத்தி மாநில விளையாட்டு மேம்பாட்டு கழகத்தின் அங்கீகாரம் பெற்ற சிலம்பாட்ட கழகத்திற்கு உரிய அந்தஸ்து கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,
இதுவரை 170 கலாச்சார விளையாட்டுகளுக்கு மத்திய அரசின் விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதில் பிறமாநில கலாச்சார விளையாட்டுகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக விளையாட்டு துறைக்காக மத்திய அரசு ஒதுக்கியுள்ள கல்வி, வேலைவாய்ப்புக்கான மூன்று சதவீத இட ஒதுக்கீட்டின் பலன்களை சிலம்பாட்ட வீரர்களால் பெற முடியவில்லை எனவே தமிழக அரசு சிலம்பாட்ட தீர்க்கு என தனி ஆணையம். ஒன்றை உருவாக்கி அதனுடன் இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை ஆகியவற்றை ஒருங்கிணைத்து. விளையாட்டு கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும்.
அதன்மூலம் ஏழை மாணவர்களுக்கு உரிய பயிற்சி அளித்து. சர்வதேச அளவிலான போட்டிகளில் தமிழக வீரர் வீராங்கனைகள் பங்கேற்று பதக்கங்களை வெல்ல, மத்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் பட்டியலில் சிலம்பத்தை சேர்க்க அழுத்தம் தர வேண்டும் என்று சிலம்ப பயிற்சியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து நடவடிக்கை எடுக்குமா ? தமிழக அரசு பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்