Wed. Dec 4th, 2024

கோவையில் கேரலியம் ஆயிர்வேத சிகிச்சை மையம் என்ற பெயரில் பாலியல் தொழிலில் ஈடுபட்டு வந்த 3 புரோக்கர்கள் உள்ளிட்ட 7 பேரை துடியலூர் போலிசார் அதிரடியாக கைது செய்தனர். தலைமறைவாக உள்ள மசாஜ் செண்டர் உரிமையாளர் போலி பத்திரிக்கையாளரான கேரளாவைச் சேர்ந்த தீபூமேத்யூவை போலிசார் தேடிவருகின்றனர்.

கோவை ஜி.என்.மில்ஸ் ஆசிரியர் காலனி பகுதியில் கேரலியம் ஆயிர்வேத சிகிச்சை மையம் என்ற பெயரில் மசாஜ் செண்டர் ஒன்று இயங்கி வந்துள்ளது. இதனை போலி பத்திரிக்கையாளர் கேரளாவைச் சேர்ந்த தீபுமேத்யூ என்பவர் நடத்தி வந்துள்ளார்.

இங்கு கேரள ஆயிர்வேத சிகிச்சை என்ற போர்வையில் பாலியல் தொழில் செய்து வருவதாக துடியலூர் காவல் நிலையத்திற்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதைத் தொடர்ந்து பெரியநாயக்கன்பாளையம் துணை காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் துடியலூர் உதவி காவல் ஆய்வாளர் பாண்டியம்மாள் அந்த சிகிச்சை மையத்திற்கு சென்று சோதனை செய்துள்ளார்.

அப்போது போலிசாரை பார்த்தவுடன் அங்கிருந்த தப்பி ஓட முயன்ற புரோக்கர்கள் பிரவீன்குமார், செல்வின், மோகன்ராஜ் ஆகியோர் பிடித்த போலிசார் அங்கு பூட்டப்பட்டிருந்த ஒரு அறையை திறந்த போது அங்கு அரை குறை ஆடைகளுடன் இருந்த ஆந்திரா, சென்னை, கோவையைச் சேர்ந்த 4 பெண்களும், அவர்களுடன் இருந்த 4 ஆண்களையும் பிடித்தனர்.

அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கோவை ஜி.என்.மில்ஸ் ஆசிரியர் காலனி பகுதியில் கேரலியம் ஆய்ர்வேத சிகிச்சை மையம் என்ற பெயரில் கேரளாவைச் சேர்ந்த தீபுமேத்யூ என்பவர் கேரளா, ஆந்திரா, சென்னை உள்ளிட்ட இடங்களில் இருந்து பெண்களை அழைத்து வந்து பாலியல் தொழில் செய்து வந்ததும், அவருக்கு ஆண்களை அழைத்து வரும் புரோக்கர்களாக பிரவீன்குமார், செல்வின், மோகன்ராஜ் செயல்பட்டு வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து 3 புரோக்கர்கள் உள்ளிட்ட 7 பேரை கைது செய்த போலிசார் அவர்களை கோவை மத்திய சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவாக உள்ள மசாஜ் செண்டர் உரிமையாளர் தீபூமேத்யூவை போலிசார் தேடிவருகின்றனர்.