முதல்வர் எடப்பாடி பழனிசாமி, இன்று இரவு (29.01.2021) சென்னை கிண்டி ஆளுநர் மாளிகையில் ஆளுநர் புரோகித்தை சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பின்போது, சட்டப்பேரவையில் ஆளுநர் ஆற்றவுள்ள உரை, அரசின் கொள்கை முடிவுகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து முதல்வர் எடுத்துக் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த சந்திப்பின் போது, தலைமைச் செயலாளர் கே.சண்முகம், மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோர் உடனிருந்தனர். ஆளுநர் சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், பேரறிவாளன் உள்பட 7 பேர் விடுதலையை குறித்து விவாதித்தாகவும், தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று, உடனடியாக 7 பேரையையும் விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு முதல்வர் இ.பி.எஸ். வலியுறுத்தியாக தெரிவித்தார்.
முன்னதாக, மாலை 4,30 மணியளவில் முதல்வர் இ.பி.எஸ். தலைமையில் அமைச்சரவைக் கூட்டம், சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், வரும் சடடமன்றத் கூட்டத்தொடரில் அ.தி.மு.க. அரசு முன்வைக்கவுள்ள கொள்கை முடிவுகள், இடைக்கால நிதிநிலை அறிக்கை உள்பட பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.