Thu. Dec 5th, 2024

டெல்லியில் உள்ள இஸ்ரேல் தூதரகம் அருகே மாலையில் பயங்கர சத்தத்துடன் குண்டு வெடிந்நததைக் கண்டு அப்பகுதி மக்கள் பீதியடைந்தனர்.

அங்கு உடனடியாக விரைந்த டெல்லி போலீசார் வெடிகுண்டு நிகழ்வு குறித்து முனைப்பான விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

இஸ்ரேல் தூதரகத்தில் இருந்து 50 மீட்டர் தூரத்திற்குள்ளாக நேரிட்ட இந்தக் குண்டு வெடிப்பில் நான்கு கார்கள் சேதம் அடைந்துள்ளதாகவும், நல்லவேளையாக உயிர்ப்பலி எதுவும் ஏற்படவில்லை என்று முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்த இடத்திற்கு தீயணைப்பு வீரர்களும் விரைந்து வந்தனர். அந்தப் பகுதியில் பதற்றம் நிலவுவதால், பாதுகாப்புப் பணியில் கூடுதல் போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர்.