இலங்கை இனப்படுகொலையைக் கண்டித்து, கடந்த 2019 ஆம் ஆண்டு ஜனவரி 29 ஆம் தேதி (29.01.2009 )சென்னை கொளத்தூரைச் சேர்ந்த முத்துக்குமார் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். அவரின் 12 வது நினைவேந்தல் நிகழ்வு, சென்னை கொளத்தூரில் உள்ள அவரது நினைவிடத்தில் நடைபெற்றது.
அங்கு அமைக்கப்பட்டிருந்த அவரது மார்பளவு சிலையை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ திறந்து உரையாற்றினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, இலங்கையில் நடந்தது போர்க்குற்றம் என சிலர் திசை திருப்புவதாக தெரிவித்தார். இலங்கையில் தமிழர்கள் நிம்மதியாக வாழ, தனி ஈழம் அமைவது ஒன்று தான் தீர்வு என்று வைகோ கூறினார். தனி ஈழம் அமைக்கப்பட வேண்டும் என்பதே தங்களது லட்சியம் என்றும் அந்த நிலை எட்டும் வரை தொடர்ந்து போராடுவோம் என்றும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உறுதிபட தெரிவித்தார்.