Mon. Apr 29th, 2024

முரசொலி மூலப் பத்திர விவகாரத்தில், தமிழக பாஜக தலைவர் எல்.முருகனுக்கு எதிராக ஒரு கோடி ரூபாய் நஷ்டஈடு கேட்டு சென்னை எழும்பூர் நடுவர் நீதிமன்றத்தில் திமுக வழக்குப்பதிவு செய்துள்ளது.

தமிழக பா.ஜ.க. தலைவர் எல்.முருகன் முரசொலி மூலப்பத்திரம் விவகாரத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை தொடர்புப்படுத்தி பேசினார். அதற்கு கடும் கண்டனம் தெரிவித்த தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, தி.மு.க. தலைவர் பற்றி பேசிய அவதூறுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும், இல்லையென்றால் அவருக்கு எதிராக அவதூறு வழக்குத் தொடரப்படும் என்று திமுக அமைப்புச் செயலாளரும், எம்பியுமான ஆர்.எஸ்.பாரதி நோட்டீஸ் அனுப்பியிருந்தார்.

அதற்கு, எல். முருகன் பதில் அளிக்காததை அடுத்து, அவருக்கு எதிராக சென்னை எழும்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் திமுக சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக செய்தியாளாகளிடம் பேசிய திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, முரசொலி மூலப்பத்திரம் குறித்து அவதூறாக பேசியது தொடர்பாக, ஒரு கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு பா.ஜ.க. தலைவர் முருகன் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.