Thu. Dec 5th, 2024

ஆண்டின் தொடக்கத்தில் நாடாளுமன்றக் கூட்டம் கூடுவது வழக்கம். அதன்படி இன்று நடைபெற்ற கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்றினார். அவரின் உரையை, காங்கிரஸ், திமுக உட்பட 18 கட்சிகள் புறக்கணித்தன.

குடியரசுத் தலைவரின் சிறப்பம்சம்: கொரோனா தொற்றுநோய்க்கு மத்தியில் நாடாளுமன்றத்தின் கூட்டுக் கூட்டம் முக்கியத்துவம் பெறுகிறது/

இது ஒரு புதிய ஆண்டு மற்றும் ஒரு புதிய தசாப்தம்.நாம் சுதந்திரமடைந்த 75வது ஆண்டில் காலடி எடுத்து வைக்கிறோம்.நாடாளுமன்ற அனைத்து உறுப்பினர்களும் நம்பிக்கையுடனும் இங்கு வந்துள்ளனர்.

எவ்நாடவளவு கடினமான சவாலாக இருந்தாலும் நம்மை அது தடுத்து நிறுத்த முடியாது. முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி உட்பட பலரை கொரோனா காலத்தில் நாம் இழந்துள்ளோம். இறந்தவர்களுக்கு எனது அஞ்சலியை செலுத்திக் கொள்கிறேன்,

இவ்வாறு ராம்நாத் கோவிந்த் உரையாற்றினார் .