உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ என்ற பிரச்சாரத்தைதி.மு.க தலைவர் மு.க. ஸ்டாலின் இன்று தொடங்கினார்.
முதல் நாளாக இன்று திருவண்ணாமலையில் மக்களிடம் குறைகளை கேட்டு, அதற்கு பதிலளிக்கும் வகையல் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது பரப்புரை வடிவத்தை அமைத்துக் கொண்டுள்ளார்.
அந்தந்த மாவட்டத்தின் பிரச்சனைகளை முன்னிலைப்படுத்தி பேசுவதுதான் அவரது பரப்புரையின் முக்கிய நோக்கம். அதன்படி, திருவண்ணாமலையில் மக்களின் குறைகள் கேட்டு ஸ்டாலின் பேசினார்.
ஒவ்வொருவராக தங்களின் குறைகளை ஸ்டாலினிடம் சொல்லி வருகிறார்கள்.
கூட்டத்தில், மாணவி கனிமொழி என்பவர் கல்வி கடனை ரத்து செய்யக்கோரிய வைத்த கோரிக்கைக்கு உடனடியாக மு.க.ஸ்டாலின் பதில் அளித்தார். .கடந்த நாடாளுமன்றத் தேர்தல் மத்தியில் ஆட்சிக்கு வர முடியாதததால் கல்வி கடனை ரத்து செய்ய முடியவில்லை என்று கூறிய அவர், நிச்சயம் தமிழக சட்டசபை தேர்தலில் வென்ற உடன் தமிழகத்தில் கல்வி கடன் ரத்து செய்யப்படும் என்று உறுதிபட தெரிவித்தார்.
கலசபாக்கம் தொகுதியில் அரசு கலை கல்லூரி கொண்டுவர வேண்டும் என்றும் அந்த மாணவி அடுத்த கோரிக்கையை வீசினார்.
மக்களின் கோரிக்கைகளை கேட்ட பிறகு அதற்கு பதிலளித்து பேசினார், மு.க.ஸ்டாலின். 7 ஆயிரம் கோடி கூட்டுறவு கடனை ரத்து செய்தார் மறைந்த முதல்வர் கருணாநிதி என்றும், அதிமுகவினர் தான் கூட்டுறவு கடன் லட்சக்கணக்கில் வாங்கியிருந்தார்கள் என்றும் நகைச்சுவையாக தெரிவித்தார்.
ஆனாலும் எந்த கட்சி என்று பார்க்காமல் தமிழக மக்களாய் பார்த்து தள்ளுபடி செய்தவர் கருணாநிதி என்றும்,முதியோர் உதவித்தொகை கட்சி பாகுபாடு இல்லாமல் அனைவருக்கும் வழங்கப்படும் என்றும் மு.க.ஸ்டாலின் உறுதிபட கூறினார்.