புதுச்சேரி காங்கிரஸ் அமைச்சர் நமச்சிவாய ம் பா.ஜ.க.வுக்கு தாவ உள்ளதாக தகவல் வெளியானது.இதனையடுத்து இரண்டு நாள்களுக்கு முன்பு அமைச்சர் பதவியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார்.. இந்நிலையில் நமச்சிவாயம், முன்னாள் எம்.எல்.ஏ.தீப்பாய்ந்தான் ஆகியோர் டெல்லியில் அகில இந்திய பாஜக தலைவர் ஜே.பி.நட்டா முன்னிலையில் அக்கட்சியில் ஐக்கியமாகியுள்ளனர்..புதுச்சேரியில் வரும் சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸை வீழ்த்திவிட்டு பாஜக அரசை அமைக்க அக்கட்சியின் டெல்லி மேலிடம் தனது ஆட்டத்தை ஆரம்பித்து விட்டதாக புதுச்சேரி காங்கிரஸ் நிர்வாகிகள் புலம்பி வருகின்றனர்….