Fri. May 17th, 2024

வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் என உயிரின் மதிப்பை உலகத்திற்கே உணர்த்திய மாபெரும் மகான் வள்ளலார் பெருமகனார். அவர் உருவாக்கிய, வடலூரில் வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபையில் 150வது ஜோதி தரிசன விழாவையொட்டி 7 திரைகள் நீக்கி ஜோதி தரிசனம் காண்பிக்கப்படுவது ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் அற்புத நிகழ்வாகும். இதனைக் காண, மாநிலம் முழுவதும் உள்ள பக்தர்கள் வடலூரில் குவிவார்கள். அதன்படி இன்று காலை 7 மணியளவில் திரையை விலக்கி ஜோதி தரிசனம் காண்பிக்கப்பட்டது. .இதில் ஆயிரகணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

இதேபோல, தொடர்ந்து காலை 10:00, மதியம், 1:00, இரவு, 7:00, 10:00 மற்றும் என ஒவ்வொரு வேளையும் ஜோதி தரிசனம் காண்பிக்கப்படும். தொடர்நது, 29ம் தேதி அதிகாலை, 5:30 மணிக்கும், ஏழு திரைகள் நீக்கி, ஜோதி தரிசனம் காண்பிக்கப்படுகிறது.

வடலூரில் நடைபெறும் தைப் பூச விழாவில் ஒருமுறையாவது கலந்துகொண்டு தரிசனம் செய்தால், மனிதப் பிறப்பின் மகத்துவத்தை முழுமையாக உணரலாம் என்பது பக்தர்களின் நம்பிக்கை.