Fri. May 17th, 2024

கடந்த ஓராண்டாக இதே இன்று விடுதலை என்று அலம்பல்கள் நடைபெற்று வந்த நிலையில், எல்லா தடைகளையும் தாண்டி இன்று காலை 11 மணியளவில் அதிகாரப்பூர்வமாக விடுவிக்கப்பட்டார் சசிகலா.

கொரோனோ தொற்று காரணமாக பெங்களுரில் உள்ள விக்டோரியோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சசிகலாவிடம், கர்நாடக சிறைத்துறை அதிகாரப்பூர்வமான விடுதலை உத்தரவை வழங்கியது. இதனையடுத்து, தண்டனைக் காலத்தில் போடப்படும் காவல்துறை கண்காணிப்பு விலக்கிக் கொள்ளப்பட்டது.

சுதந்திரப் பறவையான சசிகலா, அதே மருத்தவமனையில் தொடர்ந்து சிகிச்சைப் பெற்று வருகிறார். அவருக்கு நாளை கொரோனோ தொற்று பரிசோதனை நடைபெறுகிறது. அதன் முடிவில் அவருக்க கொரோனா தொற்று இல்லை என்பது உறுதியானால், 3 நாட்களில் மருத்துவமனையில் இருந்து வெளியே அனுப்பப்படுவார் என பெங்களூரு விக்டோரியா மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

ஆக்சிஜன் உதவி இன்றி சுவாசிக்கும் நிலைக்கு சசிகலா வந்தவுடன், அவரை பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவரை அனுமதிக்க அவர்களது உறவினர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர். அங்கு ஒரு சில நாட்கள் சிகிச்சைப் பெற்ற பின்னர், வரும் பிப்ரவரி மாதம் முதல் வாரத்தில் சசிகலா சென்னை திரும்புவார் என அவரது உறவினர்கள் தகவல் தெரிவித்தனர்.