Sun. Apr 20th, 2025

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை;

அம்மையார் ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் என்று கூறி தியானம் இருந்து துணை முதலமைச்சர் பதவி பரிசு பெற்ற ஓ.பன்னீர்செல்வம், ஒருமுறைகூட விசாரணை கமிஷன் முன் ஆஜராகவில்லை.

கொடநாடு கொலை விவகாரங்களில் குற்றம்சாட்டப்பட்ட ஒருவர், பழனிசாமியுடன் வலம் வந்தார்.

பல மர்ம ரேகைகள் ஆழமாகப் படிந்துவிட்ட EPS-OPS & Co.,-வுக்கு ஜெயலலிதாவின் நினைவகத்தைத் திறக்கும் அருகதை இருக்கிறதா?

தி.மு.க. ஆட்சி அமைந்ததும் ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மம், கொடநாடு பங்களாவில் நடந்த கொலை – கொள்ளைக்குக் காரணமானவர்கள் என அத்தனை கிரிமினல் குற்றவாளிகளையும் சட்டத்தின் முன் நிறுத்தித் தண்டனை வாங்கித் தருவோம் என்ற உறுதிமொழியைத் தமிழ்நாட்டு மக்களுக்கு இத்தருணத்தில் மீண்டும் வழங்குகிறேன்!. இவ்வாறு மு.க.ஸ்டாலின் தனது அறிக்கையில் கூறியுள்ளார்…