தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட இந்திய மொழிகளில் பின்னணி பாடி புகழ் பெற்ற மறைந்த பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தின் தெய்வீகக் குரலுக்கு பெருமை சேர்க்கும் விதமாக மத்திய அரசு பத்ம விபூஷண் விருது அறிவித்து கௌரவப்படுத்தியுள்ளது. மேலும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த 6 கலைஞர்களுக்கும் பத்ம விபூஷண் விருது அறிவிப்பட்டுள்ளது.
புகழ் பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா, வில்லுப்பாட்டு கலைஞர் சுப்பு ஆறுமுகம், விளையாட்டு வீராங்கனை அனிதா, வேளாண்மையில் சாதனை படைத்த பாப்பம்மாள் உள்ளிட்ட ஏராளமானோருக்கு பத்ம ஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.