Fri. May 2nd, 2025

அக்னி தலமான திருவண்ணாமலையில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், தனது தேர்தல் பரப்புரையை வரும் 29 ஆம் தேதி தொடங்குகிறார். தொடர்ந்து 30 நாட்கள், மாநிலம் முழுவதும் சூறாவளிப் பயணம் மேற்கொண்டு, தி.மு.க.வுக்கு ஆதரவாக பரப்புரையில் ஈடுபடவுள்ளார்.

இதுதொடர்பாக மு.க.ஸ்டாலின் பேட்டி விவரம் :

கடந்த 10 ஆண்டுகளில் தமிழக மக்களுக்கு பல்வேறு துரோகங்களை செய்தது இந்த அதிமுக அரசு என்று மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

கொரானா காலத்தில் தமிழக மக்களை அதிமுக அரசு கைவிட்டு விட்டது. ஆட்சியில் இல்லையெனினும் மக்களுக்கு ‘ஒன்றிணைவோம் வா’ திட்டத்தின் மூலம் உதவிகள் செய்தது திமுக.

மு.க.ஸ்டாலின் ஆகிய நான் தமிழக மக்களுக்கு ஊடகங்களின் மூலம் ஒரு உறுதியை தருகிறேன். “உங்கள் பிரச்சினையே தீர்ப்பதே எனது முதல் பணி. எனது அரசின் முதல் 100 நாட்களில் உங்கள் பிரச்சினையை தீர்ப்பதே வேலை”.

உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற பயணத்திட்டத்தின் மூலம் 30 நாட்களில் தமிழகத்தின் 234 தொகுதி மக்களையும் சந்திக்கிறேன். அங்குள்ள பிரச்சினைகள் குறித்து மக்கள் எனக்கு கோரிக்கை மனுக்களை தரலாம்.

வரும் 29-ஆம் தேதி திருவண்ணாமலையில் பிரச்சாரத்தை தொடங்குகிறேன் என்று தி.மு.க. மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.