Mon. Nov 25th, 2024

திருவள்ளூர் மாவட்டம் அம்மையார்குப்பத்தில் நடைபெற்ற திமுக மக்கள் சபை கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டர். பெண்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த அவர், பின்னர் கூட்டத்தினரிடையே உரையாற்றினார்.

அப்போது அவர், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மர்ம மரணம் குறித்த வழக்கு விசாரணை என்ன ஆனது என்று கேள்வி எழுப்பினார். அ.தி.மு.க ஆட்சியில் விலைவாசி விஷம்போல் ஏறிவிட்டதாகவும் குற்றம்சாட்டிய திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தரக்குறைவாக பேசி வருவதற்கு கண்டனமும் தெரிவித்தார். தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு கேள்விக்குறியாக இருப்பதாக கூறிய மு.க.ஸ்டாலின், பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் அ.தி.மு.க. பிரமுகர்களின் மகன்களுக்கும் தொடர்பு இருப்பதாக தெரிவித்தார்.

அரசுப் பணத்தில் ஒரு மாதத்திற்கு மேலாக தொலைக்காட்சிகள் மற்றும் நாளிதழ்களில் தனக்காகவும், அ.தி.மு.க.விற்காகவும் முதல்வர் செய்து வருவதாகவும் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டினார்.