தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான தேதியை அறிவிக்கவே இன்னும் ஒரு மாதம் இருக்கும் வேளையில், எந்தக் கட்சி, யாரோடு கூட்டணி வைப்பார்கள் என்று ஒவ்வொரு நாளும் வெளியாகும் தகவல்கள், அதிர்ச்சிக்கரமானவையாகவே இருக்கிறது.
கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக தமிழகம் சந்தித்திராத வகையில், வரும் சட்டமன்றத் தேர்தல், தமிழக வாக்காளர்களுக்கு பல்வேறு அதிர்ச்சியை ஏற்படுத்தி விட்டுதான் ஓயும் போல..
இன்றைக்கு எதிரெதிர் அணியில் உள்ள கட்சிகள் கூட, துண்டை தூக்கி வீசி எறிந்ததைப்போல, எதிர்முகாமிற்கு தாவிவிடுவார்கள் என்று அதிர்ச்சி வேட்டுகளை கொளுத்திப்போடுகிறார்கள், டெல்லியில் உள்ள மூத்த ஊடகவியலாளர்கள்.
இந்த தேர்தலில் டெல்லி பா.ஜ.க.வின் முழக்கமே, யார் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்பதை விட யார் ஆட்சிக்கு வரக்கூடாது என்பதுதானாம். அதைதான், அண்மையில் நடந்த துக்ளக் ஆண்டுவிழாவில், அதன் ஆசிரியர் ஆடிட்டர் குருமூர்த்தி பகிரங்கமாக போட்டு உடைத்தார். ஆனால், அவரின் எண்ணவோட்டத்திற்கு மாறாக, டெல்லியில் அரசியல் பருவநிலை அடிக்கடி மாறிக் கொண்டே இருக்கிறது என்கிறார்கள் அனுபவிமிக்க அரசியல் ஊடகவியலாளர்கள்.
ஆட்சிப் பீடத்தில் தி.மு.க. உட்கார்ந்து விடக் கூடாது என்பதை முக்கிய குறிக்கோளாக வைத்திருக்கும் அதே நேரத்தில், காங்கிரஸ் இல்லாத பாரதத்தை படைக்க, பா.ஜ.க. மேலிடம், தி.மு.க.வுக்கு ஒரு சாய்ஸ் கொடுத்திருக்கிறதாம். அதாவது, காங்கிரஸை கழற்றிவிட்டால், தி.மு.க. ஆட்சிக்கு வருவதை தடுக்க மாட்டோம் என்பதுதானாம்.
இந்த நேரத்தில்தான், தி.மு.க.வுக்கு எதிராக அனல் கக்கும் தமிழ் தேசியவாதிகளின் கடந்த கால பாட்டை, கொஞ்சம் நினைவுக்கூர்ந்து பார்க்க வேண்டியிருக்கிறது. பா.ஜ.க. வோடு ராசியாகிவிட்டது தி.மு.க. என்று கடந்த பல நாள்களாக கரித்துக் கொட்டும் அவர்களின் வாதம், உண்மைதானோ என்று நம்ப வேண்டியிருக்கிறது.
தி.மு.க.வுக்கும், பா.ஜ.க.வுக்கும் இடையே ரகசியப் பேச்சுவார்த்தை கடந்த சில நாள்களாக விறுவிறுப்பு அடைந்திருக்கிறதாம். காங்கிரஸை கழற்றி விட்டால், தி.மு.க. கூட்டணிக்கு பா.ம.க.வை அனுப்பி வைக்கிறோம் என்று வாக்குறுதி கொடுக்கப்பட்டிருக்கிறதாம்.
தி.மு.க. பா.ம.க. தே.மு.தி.க., கம்யூனிஸ்ட் கட்சிகள் என கூட்டணி உறுதியானால், அ.தி.மு.க. எக்கேடு கெட்டால் எங்களுக்கு என்ன என்று கூறுகிறார்களாம் டெல்லி வாலாக்கள்.
தி.மு.க.வுடன் பா.ம.க. கூட்டணியா? சாத்தியமே இல்லை..மருத்துவர் ராமதாஸ் ஒருபோதும் ஒப்புக் கொள்ளமாட்டார் என்பவர்களுக்காக, ஒரு பதில் ரெடியாக இருக்கிறதாம்.
இடஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு என்ற வாக்குறுதியை, கடந்த 2019 ல் நடைபெற்ற சட்டமன்ற இடைத்தேர்தலின்போதே தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் முன் வைத்தார்.
அதையே கூட்டணிக்கு அச்சாரமாக வைத்தால், பா.ம.க. தொண்டர்கள் ஏற்றுக் கொள்வார்கள் என்ற நம்பிக்கையில் இருக்கிறதாம் பா.ம.க. தலைமை. மருத்துவருக்கும், சின்ன மருத்துவருக்கும் தி.மு.க.வோடு கூட்டணி அமைக்க கொஞ்சம் தயக்கம் இருக்கலாம். ஆனால், ஒட்டுமொத்த பா.ம.க. தொண்டர்களின் விருப்பமும் தி.மு.க.வுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்பதுதான்..
கிழக்கில் உதிக்கும் சூரியன் மேற்கில் உதித்தால் கூட…
டேய் மாதவா.. தூக்கிப் போடற இந்த டைலாக்கை…
சத்தம் பலமாக தான் கேட்கிறது.