முன்னாள் அதிமுக அமைச்சர் மணிகண்டன் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் ஆதாரங்களுடன் இளம் பெண் சாந்தினி பரபரப்பு புகார்.கொடுத்துள்ளார்.
முந்தைய அதிமுக ஆட்சியில் தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சராக இருந்தவர் மணிகண்டன். அதிமுக தலைமைக்கு எதிராக பேசியதையடுத்து அவரை அமைச்சர் பதவியில் இருந்து நீங்கினார் அப்போதைய முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி. மேலும், கடந்த சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடவும் மணிகண்டனுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது.
இந்நிலையில், மணிகண்டன் அமைச்சராக இருந்த போது தன்னை திருமணம் செய்வதாக கூறி 5 ஆண்டுகள் தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்து ஏமாற்றியதாகவும், அடித்து துன்புறுத்தியதாகவும், இளம் பெண் சாந்தினி சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு வழங்கியுள்ளார்.
பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:.
கர்பிணியாக இருந்தபோது கருவை கலைக்க வைத்தார்; தவறாக போட்டோ எடுத்து மிரட்டினார்.
ஒவ்வொரு முறையும் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டதால் இதுவரை புகாரளிக்கவில்லை, ஆனால் இப்போது மிரட்ட ஆரம்பித்ததால் போலீசில் புகார் அளிக்கிறேன் .
இவ்வாறு சாந்தினி கூறினார்..