மறைந்தமுதல்வர்ஜெயலலிதாவின் நினைவிடம் வரும் 27-ஆம் தேதி திறக்கப்பட உள்ள நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் இன்று விழா ஏற்பாடுகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
அதிமுக மாவட்டச் செயலாளா்கள் ஆலோசனைக் கூட்டம் இன்று காலை ராயப்பேட்டையில் உள்ள அக் கட்சித் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இதில், அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ. பன்னீர்செல்வம், அ.தி.மு.க இணை ஒருங்கிணைப்பாளரும் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கலந்துகொண்டனர். இந்தக் கூட்டத்தில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிட வளாகம் திறப்பு விழா, தேர்தல் பணிகள் மற்றும் பிரச்சாரக் கூட்டங்கள் உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தக் கூட்டம் முடிந்தவுடன் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் நேராக ஜெயலலிதா நினைவிடத்திற்குச் சென்று, திறப்பு விழா ஏற்பாடுகளை ஆய்வு செய்தனர். தொடர்ந்து, முதல்வரும், துணை முதல்வரும் ஜெயலலிதா நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினர். ,