Sat. May 3rd, 2025

சசிகலாவுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக விக்டோரியா அரசு மருத்துவமனை தகவல் வெளியிட்டுள்ளது.

விக்டோரியா அரசு மருத்துவமனையில் உடல் நலம் பாதிக்கப்பட்ட சசிகலாவுக்கு நேற்று பல்வேறு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.

காய்ச்சல், நுரையீரல் தொற்று இருந்ததால் சசிகலாவுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்ட நிலையில், இன்றைக்கு அவருக்கு தொற்று உறுதியாகி செய்யப்பட்டுள்ளதால், அவர் தொடர்ந்து மருத்துவக் கண்காணிப்பில் இருக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது.

இதனிடையே இன்று மாலை வெளியான மருத்துவப் பரிசோதனை அறிக்கையில், அவரின் உடல்நலம் குறித்து பல்வேறு விவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.