விரைவுச் செய்திகள்….
கொரோனா தொற்று பரவல் தொடர்பாக மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமை செயலாளர் வெ. இறையன்பு ஐஏஎஸ் ஆலோசனை நடத்தினார்.
சென்னை, கோவை, செங்கல்பட்டு, திருவள்ளூர், கடலூர், ஈரோடு ஆட்சியர்கள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றனர்.
கொரோனோ தடுப்பு நடவடிக்கைகளில் அதிக கவனத்தை செலுத்த வேண்டும், ஊரடங்கு நடைமுறைகளை முழுமையாக கடைப்பிடிக்கப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும் என தலைமைச் செயலாளர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், வெப்பச் சலனம் மற்றும் தென் தமிழகத்தை ஒட்டி நிலவும் வளிமண்டலச் சுழற்சி காரணமாக கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம். ஈரோடு, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், திருவண்ணாமலை, திருச்சிராப்பள்ளி ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளிலும் மாவட்ட ஆட்சியர்கள் கவனம் செலுத்த வேண்டும் என்று தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு அறிவுரை கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.
காங்கிரஸ் எதிர்ப்பு….
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தொடர்புடைய 7 பேர் விடுதலையில் காங்கிரஸ் கட்சிக்கு உடன்பாடு இல்லை என தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்தார்.
அமைச்சர் மா.சுப்பிரமணியம் உத்தரவு
கடலூரில் நடந்த உயிரிழப்பு தொடர்பாக விசாரணைக்கு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் உத்தரவிட்டுள்ளார்.
கடலூரில் ஆக்சிஜன் கருவி எடுக்கப்பட்டதால் ராஜா என்பவர் உயிரிழந்ததாக புகார் கூறப்பட்டுள்ளது.
விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யுமாறு மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குநருக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
நீதிமன்றம் உத்தரவு…..
ஒரே கல்வியாண்டில் இரட்டை பட்டப்படிப்பு அங்கீகரிக்க முடியாது என்று சென்னை உயர்நீதிமன்ற மூன்று நீதிபதிகள் அமர்வு தீர்ப்பு வழங்கியுள்ளது.
இரட்டை பட்டப்படிப்பை அனுமதிப்பது தொடர்பாக மனித வள மேம்பாட்டு துறைக்கு பரிந்துரை செய்யப்பட்டள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் யு.ஜி.சி. தகவல் தெரிவித்தது.
தொலைதூர கல்வியாளர்களுக்கு முறையான பயிற்சி, அனுபவம் கிடையாது என்றும்
ஒரே ஆண்டில் நேரடியாக, தொலைதூரக் கல்வி மூலம் பெற்ற பட்டங்களை அங்கீகரிக்க கோரிய வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
ஸ்டெர்லைட் வழக்குகள் வாபஸ்….
ஸ்டெர்லைட் போராட்ட வழக்குகள் வாபஸ் பெறப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
பொது, தனியார் சொத்துகளுக்கு சேதம் விளைவித்தது தொடர்பான வழக்குகள் தவிர மற்றவை வாபஸ் பெறப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
செப்டம்பர் 30 வரை அவகாசம்…..
வருமான வரி தாக்கல் செய்ய அவகாசம் செப்.30 வரை நீட்டிப்பு: நிறுவனங்களுக்கு நவ.30 அவகாசம்.
தனி நபர்கள், 2020-21 நிதியாண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான அவகாசத்தை செப்டம்பர் 30ம் தேதி வரை நீட்டிப்பு செய்துள்ளது.
நிறுவனங்கள் கணக்கு தாக்கல் செய்ய நவம்பர் 30 வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு படிவம் 16ஐ வழங்குவதற்கான அவகாசம் ஒரு மாதம் நீட்டிக்கப்பட்டு ஜூலை 15ம் தேதி வரை வழங்கப்பட்டுள்ளது.
கொரோனோ பாதிப்பு விவரம்…..
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில், 36,184 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
467பேர் உயிரிழந்து உள்ளனர். 24,478 பேர் குணமடைந்து உள்ளனர்.