2021-ஆம் ஆண்டிற்காக தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டம், ஆளுநர் உரையுடன் பிப்ரவரி 2 ஆம் தேதி தொடங்குகிறது.
இதுதொடர்பாக பேரவை செயலாளர் சீனிவாசன் வெளியிட்டிருக்கும் அறிவிப்பு…
,தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் கூட்டத்தை 2021-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 2-ஆம் நாள் செவ்வாய்க்கிழமை காலை 11 மணிக்கு வாலாஜா சாலை, ஓமந்தூரார் அரசினர் தோட்டம், கலைவாணர் அரங்கம், மூன்றாவது தளத்தில் உள்ள பல்வகை கூட்டரங்கத்தில் தமிழக ஆளுநர், கூட்டியிருக்கிறார் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
அன்றே, அதாவது பிப்ரவரி 2-ஆம் தேதி காலை 11 மணிக்கு தமிழக ஆளுநர் உரை நிகழ்த்த உள்ளார்கள்.
சட்டமன்ற தேர்தலுக்கு முந்தையக் கூட்டம் இது என்பதால், மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக இந்தக் கூட்டத்தொடர் அமையும். எத்தனை நாள்களுக்கு இந்தக் கூட்டம் நடைபெறும் என்பது குறித்து அலுவல் ஆய்வுக் கூட்டத்தில் முடிவெடுக்கப்படும் என்றும் சீனிவாசன் தனது அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளார்..
கரோனா அச்சுறுத்தல் காரணமாக, சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் கலைவாணர் அரங்கத்தில் நடைபெறும் என்றும், ஆண்டின் முதல் கூட்டத் தொடர் என்பதால், பிப்ரவரி 2-ஆம் தேதி கூட்டத் தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.