Sat. Nov 23rd, 2024

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்தலுக்கு முன்பாக குறைந்தது 200 தொகுதிகளில் திமுக கூட்டணி வெற்றிப் பெறும் என்று அழுத்தம் திருத்தமாக சொல்லி வந்தார். அதுபோலவே வாக்குப்பதிவுக்கு பிந்தைய பேட்டிகளின் போதும் 234 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றிப் பெற்றால் ஆச்சரியமில்லை என்றே தெரிவித்து வந்தார். கொடைக்கானலுக்கு குடும்பத்துடன் இளைப்பாறுதலுக்காக சென்ற மு.க.ஸ்டாலின், அமைச்சரவை பட்டியலையே தயாரித்துவிட்டதாகவும் செய்திகள் வெளியாகின.

திமுக.வைப் பொறுத்தவரை மே 2க்குப் பிறகு ஆட்சியமைப்பதற்கான பணிகளை மிகுந்த நம்பிக்கையுடன் மேற்கொண்டு வரும் நேரத்தில், அதனோடு கூட்டணி வைத்த கட்சிகளில் ஒன்றான இந்திய தவ்ஹீத் ஜமாஅத், தங்கள் கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெறுவதற்கும், திமுக உள்ளிட்ட கூட்டணிக் கட்சி வேட்பாளர்கள் வெற்றிப் பெறுவதற்கும் பிரார்த்தனை செய்வோம், வாருங்கள் என்று அழைப்பு விடுத்துள்ளது.

வாக்கு எண்ணிக்கைக்கு 3 நாட்களே எஞ்சியுள்ள நிலையில், திமுக கூட்டணி வெற்றிக்காக பிரார்த்தனை செய்வோம் வாருங்கள் என்று அழைப்பு விடுப்பவர்களே, வெற்றி மீது சந்தேகம் விழுந்துவிட்டதாகதானே அர்த்தம் கொள்ளப்படும். வாக்களித்த மக்கள் மீதான நம்பிக்கையை இழந்து ஆண்டவரிடம் சரணடையும் நிலைக்கு தள்ளப்பட்டு விட்டார்களோ என்று பரிதாபம்தான் எழுகிறது.

பாவம் அவர்கள் என்ன செய்வார்கள்.. தேர்தல் நேர காய்ச்சல், கொரோனோ காய்ச்சலை வாட்டி வதைக்கிறது.

திமுக கூட்டணி கட்சிகள் 200 தொகுதிகளில் மேலாக வெற்றி பெற வாழ்த்துகள் தெரிவித்து இந்திய தவ்ஹீத் ஜமாஅத் துணை தலைவர் முஹம்மது மனீத் வெளியிட்டுள்ள அறிக்கையின் விவரம் இதோ…..

இஸ்லாமிய சமூதாயத்தை சேர்ந்த

பாபநாசம் வேட்பாளர்: பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ்.

மணப்பாறை வேட்பாளர்: அப்துல் சமது

கடையநல்லூர் வேட்பாளர்: அபூபக்கர்

சிதம்பரம் வேட்பாளர்: அப்துல் ரஹ்மான்

வாணியம்பாடி வேட்பாளர் நயிம்

நாகபட்டினம் வேட்பாளர்: ஆளூர் ஷாநவாஸ்

பாளையங்கோட்டை வேட்பாளர்: அப்துல் வகாப்

ஆவடி வேட்பாளர்: சாமூ நாசர்

செஞ்சி வேட்பாளர்: மஸ்தான்

வேளச்சேரி வேட்பாளர்: ஹசன் மவுலானா

மற்றும் இவர்கள் உடன் சகோதரர்கள் கிருஸ்த்துவ நல்லிணக்க தலைவர் இனிகோ இருதயராஜ்,தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், மதிமுக மல்லை சத்யா .

ஆகியோர் சமுதாயத்தின் குரலாக சட்டமன்றத்தில் ஒலிக்க வேண்டும் என்ற ஆசை உள்ளது இறைவன் கிருபை செய்ய அனைவரும் பிரார்த்தனை செய்வோம்.

இவ்வாறு இந்திய தவ்ஹீத் ஜமாஅத்.துணை தலைவர் முஹம்மது முனீர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.