சென்னை உள்பட தமிழகம் முழுவதும் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற்ற 234 சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு எந்திரங்கள், அந்த மாவட்டங்களில் உள்ள கல்வி நிறுவனங்கள் உள்ளிட்ட இடங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. மூன்று அடுக்கு பாதுகாப்பில் கண்காணிக்கப்பட்டு வரும் வாக்கு எண்ணும் மையங்களில் வெளிநபர்களின் நடமாட்டம், அடையாளம் தெரியாத வாகனங்களில் வருகை போன்றவற்றை குறித்து திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர். இந்த நிலையில், மக்கள் நீதி மையத்தின் ஒருங்கிணைப்பாளர் நடிகர் கமல்ஹாசன், இன்று தலைமைச் செயலகத்தில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரியை சந்தித்து புகார் கடிதம் வழங்கினார். அப்போது அவர், வாக்கு எண்ணிக்கையை நேர்மையாக நடத்த வேண்டும் என்று கூறியதுடன், பல்வேறு ஆலோசனைகள் அடங்கிய அறிக்கையையும் அவர் சமர்ப்பித்தார்.




