Mon. Nov 25th, 2024

செக் மோசடி வழக்கில் நடிகர் சரத்குமார் மற்றும் ராதிகா சரத்குமார் ஆகியோருக்கு தலா 1 ஆண்டு சிறை தண்டணை விதித்து, எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ’க்கள் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் மேஜிக் ஃபிரேம்ஸ் மற்றும் ரேடான் மீடியா குரூப் நிறுவனத்தில் நடிகர் சரத்குமார், அவரது மனைவி நடிகை ராதிகா ஆகியோர் பங்குதாரர்களாக உள்ளனர். இந்த நிறுவனம் புதிய படம் ஒன்றை தயாரிப்பதற்காக கடந்த 2014 ஆம் ஆண்டு ரேடியன்ஸ் மீடியா என்ற நிறுவனத்திடம் ரூ 2 கோடி கடன் பெற்றனர். இதற்காக மொத்தம் 7 காசோலைகளை அந்த நிறுவவனம் வழங்கியுள்ளது. அதில், ஒரு காசோலை வங்கி கணக்கில் பணமில்லாததால் திரும்பியுள்ளது.

இதையடுத்து ரேடான் நிறுவனம் சார்பில் சரத்குமார் மற்றும் ராதிகா சரத்குமார், பங்குதாரர் ஸ்டீபன் ஆகியோருக்கு எதிராக சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் 7 கிரிமினல் வழக்கு தொடரப்பட்டது. அந்த மனு மீதான விசாரணை நடைபெற்று வந்த நேரத்தில், தங்களது நிறுவனத்திற்கு எதிரான வழக்கை ரத்து செய்ய கோரி நடிகர் சரத்குமார் மற்றும் ராதிகா சரத்குமார் ஆகியோர் சார்பில் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

மேலும், சைதாப்பேட்டை 3 -வது விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கு விசாரணை ஆறு மாதத்தில் விசாரித்து முடிக்கவும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில் இந்த வழக்கு எம்.எல்.ஏக்களுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.வழக்கை விசாரித்த நீதிமன்றம் சரத்குமார், ராதிகா சரத்குமார் ஆகியோருக்கு தலா ஒரு ஆண்டு சிறைத் தண்டனை விதித்து இன்று தீர்ப்பளித்தது.

மொத்தம் 7 வழக்குகளில் சரத்குமார் மீதான ஐந்து வழக்குகளில் தலா ஓராண்டும், மீதமுள்ள இரண்டு வழக்குகளில் சரத்குமார் ,ராதிகா, பங்குதாரர் ஸ்டீபன் ஆகியோருக்கு தலா ஓராண்டு சிறை தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்த விவகாரம், மநீம கூட்டணியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நேர்மையே தனது கட்சியின் பிரதான கொள்கை என்று கூறி வரும் மக்கள் நீதி மய்யத்தோடு, தற்போதைய சட்டமன்றத் தேர்தலையொட்டி, நடிகர் சரத்குமாரின் அகில இந்திய சமத்துவக் கட்சியோடு கூட்டணி அமைந்தது.

செக் மோடி வழக்கில் சரக்குமார், ராதிகா ஆகியோருக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில், தனது கூட்டணியில் இருந்து அகில இந்திய சமதுதுவக் கட்சியை வெளியேற்றுவாரா? கமல்ஹாசன் என்ற எதிர்பார்ப்பு மநீம. நிர்வாகிகளிடம் எழுந்துள்ளது. காசோலை மோடி புகாரில் சரத்குமார் மட்டும் சிக்கவில்லை. அவரது மனைவியும் நடிகையுமான ராதிகாவும் மாட்டியுள்ளார். இருவருமே, மக்கள் நீதி மய்யம் மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து மாநிலம் முழுவதும் பிரசாரத்தில் ஈடுபட்டனர். சொந்த வாழ்க்கையில் நேர்மையாக வாழ முடியாதவர்கள் எப்படி நேர்மையான ஆட்சியை அமைக்க விரும்பும் கமல்ஹாசனுக்கு உறுதுணையாக இருக்க முடியும். மோசடி புகாரில் சிக்கியுள்ள இருவருக்கு எதிராக எழும் விமர்சனங்கள், கமல்ஹாசனைதானே முதலில் பாதிக்கும் என பல்வேறு கேள்வி எழுப்புகிறாகள் மக்கள் நீதி மையப் பொறுப்பாளர்கள்.

அரசியல் ஆதாயம் பார்க்காமல், விரைந்து நடவடிக்கை எடுப்பாரா நேர்மையின் நாயகன் கமல்ஹாசன் என்று எதிர்க்கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகளும் குரல் எழுப்பத் தொடங்கிவிட்டனர்.