Sat. Nov 23rd, 2024

தமிழக சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் என புதிய கட்சியை ஆரம்பித்த நடிகர் கமல்ஹாசன், கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடுகிறார். ஹெலிகாப்டரில் பறந்து பறந்து பிரசாரம் செய்து பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார்.

பாஜக.வில் நடிகை குஷ்பு நேரடியாக களத்தில் உள்ளார். அதே கட்சியில் உள்ள நடிகை நமீதா தமிழில் பேசவே தெரியாத போதும் தைரியமாக பிரசாரத்தை மேற்கொண்டு வருகிறார். மச்சான்ஸ் தாமரைக்கு ஓட்டுப் போட்டுங்க என்ற ஒற்றை வரியை பிரசாரமாக கொண்டு தமிழகம் முழுவதும்சுற்றி வருகிறார்.

நடிகை விந்தியா, அதிமுக மற்றும் பாஜக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்து வருகிறார். இவரின் பரப்புரையை கேட்க இயல்பாகவே ஒரு கூட்டம் கூடுகிறது. இவர்கள் தவிர நடிகர் செந்தில் உள்பட பல திரையுலக பிரமுகர்கள் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த தேர்தல்களைப் போல, திரையுலக நட்சத்திரங்களுக்கான செல்வாக்கு, இந்த தேர்தலில் அதிமாக இல்லை. அதிமுக, திமுக, பாஜக என அனைத்துக் கட்சிகளை சேர்ந்த தலைவர்கள், ஐடி விங் எனப்படும் சமுக ஊடகங்களின் பிரசாரத்தை முழுமையாக நம்பி களத்தில் குதித்திருப்பதால், திரையுலக நட்சத்திரங்களின் பிரசாரத்திற்கு முக்கியத்துவம் கிடைக்கவில்லை. இந்த நிலையிலும், பிரசாரத்திற்குச் செல்லும் நடிகர், நடிகைகள் நட்சத்திர அந்தஸ்து ஹோட்டல்களில் அறை, சொகுசு கார், பல ஆயிரம் ரூபாய் நாள்தோறும் கட்டணம் என பந்தா பண்ணுகிறார்கள். இதையெல்லாம் தலையெழுத்தே என அணுசரித்துக் செல்கின்றனர் அரசியல்கட்சி வேட்பாளர்கள்.

இப்படி தேர்தல் களமே களேபரமாக இருக்கும் போது, எளிய மனிதராக பேருந்துகளில் பயணித்தும், நடந்து சென்றும் மார்க்சிய கம்யூனிஸ்ட் வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரித்து வரும் நடிகை ரோகிணி, உண்மையிலேயே களப் போராளியாகதான் காட்சியளிக்கிறார். மானுடம் ஜெயிக்க மனிததன்மையோடு இருக்க வேண்டும். அதற்கு உதாரணமாக இருப்பவர் நடிகை ரோகிணி…

https://www.facebook.com/watch/?v=558973631685801