கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் அதிமுக கூட்டணி யில் பாஜக வேட்பாளராக அண்ணாமலை ஐபிஎஸ் போட்டியிடுகிறார்.. கர்நாடகாவில் காவல்துறை எஸ்.பி.யாக பணியாற்றிய இவர் பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெற்று பாஜக. வில் அண்மையில் இணைந்தார்..பாஜக. வில் பல ஆண்டுகளாக இருக்கும் தலைவர் களிடம் இல்லாத துணிச்சல் இவரிடம் இருப்பதை கண்டு பிரதமர் மோடி ஆதரவு இளம்தவைமுறையினர் அண்ணாமலை ஐபிஎஸ். ஸை தலையில் வைத்து கொண்டாடி கொண்டு இருக்கிறார்கள்..
டெல்லி பாஜக.வின் கனவான கழகங்கள் இல்லாத ஆட்சி தமிழகத்தில் மலர 2026க்கான ஐகான் அண்ணாமலை ஐபிஎஸ் தான் என்பது உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் ஐடியா… கழகம் போய் காவி வருமா? அண்ணாமலையின் இந்த பேச்சில் பொதிந்து இருக்கும் உண்மை என்ன? உள்குத்து என்ன? விடை மே 2 ல்…மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு……