Mon. Nov 25th, 2024

சென்னை அதிமுக அலுவலகத்தில் நேற்று மாலைல அதிமுக தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது. இதனை முடித்துக் கொண்டு முதல்வர் பழனிசாமி, விமானம் மூலம் திருச்சி சென்று அங்கிருந்து கார் மூலம் சேலம் சென்றார்.

விமான நிலையத்தில் அவரை வரவேற்க, திருச்சி மாநகர், மாவட்ட அதிமுக பிரபலங்கள் மகிழ்ச்சி பொங்க வரவேற்றனர். அப்போது, சிரிப்பொலி சத்தம் அதிகமாக இருந்தபோதும், விம்மி விம்மி அழும் குரல் ஒன்று கேட்கவே, முதல்வர் மொத்த கூட்டமும் அதிர்ச்சியடைந்தது. அழுகை சத்தம் கேட்ட பக்கம் திரும்பி பார்த்த போது, அங்கு மண்ணச்சநல்லூர் தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் பரமேஸ்வரி முருகன், பொங்கி வந்த அழுகையை அடக்க முடியாமல் தேம்பினார். அவரைப் பார்த்த முதல்வர், அருகில் அழைத்து சமாதானப்படுத்திவிட்டு, ஊருக்குப் போய் தேர்தல் வேலையைப் பாருங்கள். உரிய மரியாதை தேர்தலுக்குப் பிறகு கிடைக்கும் என்று கூறினார்

அதன்பிறகும், சாமதானம் ஆகாமல் பரமேஸ்வரி முருகன் விசும்பவே, அங்கிருந்த மாவட்ட நிர்வாகிகள், பரமேஸ்வரி முருகனை ஆறுதல்படுத்தி, பொறுமையாக இருங்கள். அடுத்த முறை கட்சி கண்டிப்பாக உங்களுக்கு உரிய வாய்ப்பு வழங்கும். மனதை தேற்றிக் கொண்டு ஊருக்குப் போய் தேர்தல் வேலையைப் பாருங்கள் என்று கூறி அனுப்பி வைத்தனர். விமான நிலையம் வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காருக்கு திரும்பும் வரை, கண்களில் இருந்து வழிந்த கண்ணீரை கட்டுப்படுத்த முடியாமல், மிகவும் சோர்ந்து போயிருந்தார் பரமேஸ்வரி முருகன்.

அவரது உறவினர்களும், மண்ணச்சநல்லூர் அதிமுக நிர்வாகிகளும், ஆறுதல் கூறினர். பின்னரே அவர் ஊருக்கு திரும்பினார்.

அதிமுக அறிவித்திருக்கிற வேட்பாளர் பட்டியலில் அமைச்சர்கள், சிட்டிங்க எம்.எல்.ஏ.க்கள் பலருக்கு மீண்டும் போட்டியிட தலைமைக் கழகம் வாய்ப்பு வழங்கப்பட்டியிருக்கிறது. அவர்களுக்கு எதிராக இல்லாத குற்றச்சாட்டா எங்க ஊர் எம்.எல்.ஏ, பரமேஸ்வரி மீது இருக்கு…அவர்கள் எல்லாம் உத்தமர்களா? அவங்க போட்டியிட தொகுதிகளில் எல்லாம் வெற்றி நிச்சயமா என்ன? பரமேஸ்வரி முருகனுக்கு மீண்டும் வாய்ப்பு கொடுத்திருந்தா குறைஞ்சா போயிடும்.. இந்த அம்மா ஜெயிக்கலான்னா அதிமுக ஆட்சி அமையாமலா போயிடும்… எவ்வளவு மனசு நொந்து போயிருந்த முதல்வர் இ.பி.எஸ்.ஸை வரவேற்க வந்த இடத்தில கண்ணீர் அழுது இருப்பாங்க.. பெண் சிந்தும் கண்ணீருக்கு இருக்கும் சக்தி, இ.பி.எஸ்.ஸுக்கு தேர்தலுக்குப் பிறகு புரியம் என்று ஆவேசமாக பேசினார், மணச்சநல்லூர் அதிமுக நிர்வாகி ஒருவர்..,

மனசுக்குள் இருந்த சோகத்தை வெளிப்படுத்தாமல், ஊடகங்களில் கட்சிக்கு ஆதரவாக பேட்டியளித்தார் பரமேஸ்வரி முருகன்…

பரமேஸ்வரி முருகனின் சொந்த தொகுதியான மணச்சசநல்லூரில் முன்னாள் அமைச்சர் பரஞ்ஜோதி போட்டியிடுகிறார். இவருக்கு எதிராகவும் திருச்சியைச் சேர்ந்த பிரபல பெண் பிரமுகர் ஊர், உலகம் அறிய குற்றம் சாட்டினார்.

பெண்கள் சிந்தும் கண்ணீருக்கு சக்தி அதிகம்… பார்த்துப்பா…பெண் பாவம் பொல்லாதது… ..