அதிமுக வெளியிட்டுள்ள இரண்டாம் கட்ட வேட்பாளர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ள பிரபலங்களின் பெயர்களை தனித்தனியாக ஸ்கேன் செய்து பார்த்தால், ஜெயலலிதா இல்லாத அதிமுக.வில் இப்படியெல்லாம் நடக்குமா என்று அதிர்ச்சிக்குரிய தகவல்கள்தான் அதிகமாக அலையடித்துக் கொண்டு இருக்கின்றன.
அதில், உச்சபட்ச அதிர்ச்சியாக கூறப்படுவது, மதுராந்தகம் தனி தொகுதிக்கு அறிவிக்கப்பட்டுள்ள அதிமுக வேட்பாளர் மரகதம் குமரவேலைப் பற்றிய சர்ச்சைதான். 2006ல் திருப்போரூர் ஒன்றிய குழு உறுப்பினராகி, அரசியல் பிரவேசம் செய்கிறார்.
எட்டு ஆண்டுகளுக்குள் ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்டத்தில் பிரபலமாகி 2014 நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக வேட்பாளராகி, டெல்லிக்கு எம்.பி.யாக செல்கிறார்.
ஐந்தாண்டுகள் அமோக வாழ்க்கைதான். இவரைச் சுற்றி கிளப்பப்படும் வதந்திகள் அனைத்தும் உண்மைதானோ என்று நம்பும் அளவிற்குதான் மரகதம் குமரவேலுவின் நடவடிக்கைகளும், பளபளப்பும் அதிசயமாக பார்க்கப்பட்டது.
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகும் மேலிட செல்வாக்கால் மீண்டும் 2019 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைத்தது. அப்போது எழுந்த மோடி எதிர்ப்பு அலையால், 38 தொகுதிகளில் அதிமுக.மற்றும் கூட்டணி ஊத்திக் கொண்டதால், மரகதம் குமரவேலும் கரையேறவில்லை.
பதவி இல்லாமல் ஒரு நிமிடம் கூட வாழ முடியாது என்ற மனப்பான்மையால், என்ன விலை கொடுத்தாவது, 2021ல் எம்.எல்.ஏ.வாகிவிட வேண்டும் என்று வெறித்தனமாக களமாடிக் கொண்டிருக்கிறார் மரகதம் குமரவேல். அதற்கு விலையாக, வேட்பாளராக அறிவிப்பதற்கே ஒரு கோடி ரூபாயை வாரி இறைத்திருக்கிறார் என்ற தகவல்தான், செங்கல்பட்டு மாவட்ட அதிமுக.வினரிடையே சூடான, பட்டையை கிளப்பும் விவாதமாக மாறியிருக்கிறது.
இவருக்கு சீட் கொடுக்க கொங்கு மண்டலத்தின் கடைக்கோடி அமைச்சர், தன்னுடைய செல்வாக்கை எல்லாம் முழுமையாக பயன்படுத்தி பேராடியாதாக அதிமுக தலைமை அலுவலகத்தில் இருந்து தகவல் கசிய விடப்படுகிறது.
கூட்டணி கட்சியைச் சேர்ந்த பெண் பிரபலத்திற்கே மனம் இரங்கக் கூடிய அந்த அமைச்சர், சொந்தக் கட்சியைச் சேர்ந்த பெண் பிரபலத்திற்கு உதவ மாட்டாரா என்ன ? என்று கேள்வி கேட்கும் திருப்போரூர் அதிமுக நிர்வாகிகள், அதற்காக ஒரு கோடி ரூபாயை விலையாக கேட்டிருப்பதுதான், அவர் மீதான மரியாதையை குறைத்துவிட்டது என்கிறார்கள்…
வாழ்க் அமைச்சரின் புகழ்…
ஆனால், ஒரு சந்தேகம்தான் என்று முற்றுப்புள்ளி வைக்காமல் பேசும் திருப்போரூர் அதிமுக நிர்வாகிகள், உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணியை அன்மைக்காலமாக அடிக்கடி சந்தித்து வந்தாரே மரகதம் குமரவேல். அவரின் ஆசிர்வாதம் கிடைக்கவில்லையா என்கிறார்கள் மரகதம் குமரவேலுவுக்கு நெருக்கமான விசுவாகிகள்…