Sun. Nov 24th, 2024

திமுக தலைமை அலுவலகமான அண்ண அறிவாலயத்தில் கடந்த சனிக்கிழமை நேர்காணல் நடந்தது.. தேர்தலில் போட்டியிட விருப்ப மனு வழங்கியவர்களை மாவட்ட வாரியாக நேர்காணல் செய்தனர் திமுக தலைவர் முக ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள்..நிறைவு நாள் அன்று உதயநிதி ஸ்டாலினும் கலந்து கொண்டார்..அவரிடம் மு.க.ஸ்டாலின் , சேப்பாக்கம் தொகுதியில் அவசியம் போட்டியிட வேண்டுமா என்று கேள்வி எழுப்பியதாக தகவல் தெரியவந்தது..

டைம்ஸ் நவ் ஆப் இண்டியா அரசியல் செய்தியாளர் ஜெயா மேனன் இதை பதிவு செய்திருந்தார்..அதேபோல் தமிழ் ஊடகங்களில் நல்லரசு தமிழ் செய்திகள் தான் முதலாவதாக பதிவு செய்தது..தொடர்ந்து பிற ஊடகங்களும் உதயநிதி தொடர்பான செய்தியை வெளியிட்டன..

இதைத்தான் பொது வெளியில் குறிப்பிட்டு ஊடகவியலாளர்களை ஒருமையில் பேசி இருக்கிறார் உதயநிதி.. பாவம் அவருக்கு சேப்பாக்கம் தொகுதியின் கடந்த கால வரலாறு தெரியாது..இந்த தொகுதியில் 1996 ஆம் ஆண்டில் மறைந்த திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி போட்டியிட்ட போது அவரை எதிர்த்து காங்கிரஸ் வேட்பாளராக களம் கண்ட நெல்லை கண்ணன் பேசிய ஆடியோவை வாங்கி ஒருமுறை கேட்டு பார்த்து கொள்வது நன்று..

திமுக.வைப் பற்றி 20 ஆண்டுகளுக்கு என்ன மாதிரியான குற்றச்சாட்டுகளை நெல்லை கண்ணன் வைத்தாரோ, அவை இன்றைக்கும் திமுக.வுக்கு பொருந்தும்.. இந்த இடைப்பட்ட காலத்தில் திமுக ஒன்றும் புனிதமாகிவிடவில்லை..

கலைஞர் கருணாநிதி இருந்த காலத்தில் மு.க. ஸ்டாலின் ஒருமுறை கூட இப்படி பேசியிருக்க மாட்டார்..அன்றைக்கு இருந்த பொதுச் செயலாளர் பேராசிரியர் க அன்பழகனின் வார்த்தையை மீறி மு.க. ஸ்டாலின் பொது வெளியில் இப்படி பேசியதாக செய்திகள் இல்லை..

தனக்கு தந்தையாக இருந்தாலும் கூட திமுக.வின் தலைவராகதான் கலைஞர் மு.கருணாநிதியை, அவர் மறையும் வரை மரியாதை கொடுத்து வந்தார், மு.க.ஸ்டாலின். மேலும் அரசியலில் நுழைந்த ஓரிரு ஆண்டுகளிலேயே தேர்தலில் இளைஞரணி செயலாளர் பதவியும், சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பும், இப்போதைய திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு வழங்கப்படவில்லை..

வெளிப்படுத்தும் வார்த்தைகளை விட வெளிப்படுத்தாத சொல்லுக்கு தான் அதிக சக்தி உண்டு என்பார்கள்.. உதயநிதி பிரசாரத்திற்கு போனால் தான் 234 தொகுதிகளிலும் திமுக.வுக்கு வெற்றி கிடைக்கும் என்ற நித்திரை எல்லாம் காண வேண்டாம்..

அடக்கமாக பேசுங்கள்.. திமுக மீதான கடந்த கால கசப்புகளை மக்கள் இன்னும் மறக்க வில்லை.. வரும் மே 2 ம் தேதி திமுக பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்றிருக்கிறது என்று அறிவிப்பு வருமானால் அதற்கு காரணம் திமுக மீதான நல்லெண்ணத்தினால், நம்பிக்கையால், கிடைத்த வெற்றி என்று மார் தட்டிக் கொள்ளாதீர்.

பத்தாண்டு கால அதிமுக ஆட்சி மீதான அதிருப்தி + பாஜகவின் மாநில உரிமைகள் பறிப்பு உள்ளிட்ட காரணிகளால் தான் திமுக.வுக்கு வெற்றி கை கூடி இருக்கிறது என புரிந்து கொள்ளுங்கள்..

மேடை நாகரித்தை மறந்து உளறி கொட்டி திமுக.வின் கடந்த காலத்தை நீங்களே தயவுசெய்து பொதுமக்கள் மத்தியில் கிளறிவிட்டு விடாதீர்கள்..

நந்தவனத்தில் ஓர் ஆண்டி…என்ற கதையாகி விடப்போகிறது….