Sun. Nov 24th, 2024

திமுக கூட்டணியில் நீண்ட இழுபறிக்குப் பிறகு காங்கிரஸுக்கு 25 தொகுதிகளும் இடைத்தேர்தல் நடைபெறவுள்ள கன்னியாகுமரி தொகுதியையும் ஒதுக்கி, காங்கிரஸ் கட்சியை தன்னுடைய கூட்டணியிலேயே வைத்துக் கொண்டது, திமுக தலைவர் மு.க.ஸ்.டாலின் ராஜதந்திரத்திற்கு கிடைத்த முதல் வெற்றி என்கிறார்கள், கூட்டணியில் உள்ள முன்னணி தலைவர்கள்.

தமிழக காங்கிரஸில் தலைவர்கள் நூறு பேர் இருக்கிறார்கள் என்பது எந்தளவிற்கு உண்மையோ, அதைப் போலவே, அவர்களை நம்பி தலா ஆயிரம் ஆயிரமாயிரம் தொண்டர்கள்கூட இல்லை என்பதும் உண்மையே.. கடந்த 20 ஆண்டுகளில் தமிழகத்தில் காங்கிரஸ் தலைவர்கள் உருவாகினார்களே தவிர, தொண்டர்களின் எண்ணிக்கை பெருமளவில் அதிகரிக்கவில்லை என்பதும் உண்மையானதுதான். ஆனால், கடந்த பத்தாண்டுகளில் பாஜக.வின் பக்கம் சாயும் தொண்டர்களின் எண்ணிக்கை பெருகிக் கொண்டே வருவது ஆச்சிரியம் கலந்த அதிர்ச்சிகரமான வியடம்.

2014 ம் ஆண்டுக்குப் பிறகு தேர்தல் வெற்றியை மட்டுமே முழு அஜெண்டாவாக கொண்ட ஒரு தலைவரின் கட்டுப்பாட்டின் கீழ் மத்திய அரசு அமைந்தவுடன், தமிழகத்தில் பாஜக தொண்டர்கள் பெருகி கொண்டே வருகிறார்கள். ஆனால், பல ஐந்தாண்டுகள் மத்தியில் ஆளும் வாய்ப்பு கிடைத்த போதும், தமிழகத்தில், ஏன் இந்தியாவில் உள்ள பெரும்பாலான மாநிலங்களில் அடிமட்டத்தில் இருந்து காங்கிரஸைப் பலப்படுத்த, மத்தியில் ஆட்சியில் இருந்த ஆட்சியாளர்கள் தவறிவிட்ட குற்றத்திற்கு இப்போதுதான் அவர்கள் தண்டனையை அனுபவித்துக் கொண்டிக்கிறார்கள்.

திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள அனைத்துக் கட்சிகளுக்கும் இரண்டு, மூன்று மாதங்களுக்கு முன்பே, ஒவ்வொரு கட்சிக்கும் எவ்வளவு தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்படவுள்ளன என்பதை திமுக தலைமை திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது, என்பதை விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், புதிய தலைமுறை தொலைக்காட்சியின் நிர்வாக ஆசிரியர் கார்த்திகைச் செல்வனுக்கு வழங்கிய நேர்காணலில் நேர்படுத்தப்பட்ட உண்மை.

ஆக, கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக தொகுதி பங்கீடு குறித்து திமுக.வோடு முரண்டு பிடிக்கிறோம் என்பதுபோல நடித்தவர்கள், அக்கட்சியோடு கூட்டணி வைத்த இதர கட்சித் தலைவர்கள் என்பதுதான், அதிர்ச்சிக்குரிய ஒன்று. அதில், தேசியக் கட்சியான காங்கிரஸும் அடக்கம் என்பதுதான் சோகம்தான்.

காங்கிரஸ் கட்சியை கூட்டணியில் இருந்து கழற்றி விடுங்கள் என்று மத்திய பாஜக அரசு, திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் மிரட்டும் தோணியிலேயே எச்சரிக்கை விடுத்தது. ஆனாலும், அதையும் மீறி, மதவாத அரசியலையும், ஊழலில் ஊறிப்போன மாநிலத்தில் உள்ள ஆளும்கட்சியையும் அகற்றுவதே பிரதான குறிக்கோள் என்பதில் உறுதியாக நின்றுள்ளார், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.

மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்பட ஒரு கட்சியையும் கூட்டணியில் இருந்து வெளியேறி விடாமல், அதே நேரம் மறைந்த திமுக தலைவர் கருணாநிதி போல, மனம் இரங்கி கூட்டணிக் கட்சிகளின் பலத்திற்கு மேலாக தொகுதிகளை வாரி வழங்கி விடாமல், கறாராக கூட்டணிக் கட்சிகளுக்கு தொகுதிகளை ஒதுக்கி, அவரை விட தான் மிகப்பெரிய அரசியல் ராஜதந்திரி என்பதை நிரூபித்திருக்கிறார் என்கிறார்கள், அவரது தலைமையில் தேர்தலை சந்தித்துக் கொண்டிருக்கும் கூட்டணிக் கட்சித் தலைவர்கள்.

அவரின் ராஜதந்திரத்திற்கு அகில இந்திய காங்கிரஸ் தலைமையே சர்டிபிகேட் கொடுத்த மாதிரிதான் அமைந்திருக்கிறது, காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்ட 25 தொகுதிகள் எண்ணிக்கை. ராகுல்காந்தி நேரடியாக மு.க.ஸ்டாலினோடு பேசியதையடுத்துதான், நேற்றிரவு அவசர அவசரமாக தமிழக காங்கிரஸ் தலைவர்களை தனது இல்லத்திற்கே அழைத்து, தொகுதி பங்கீட்டை உறுதி செய்துள்ளார் அவர்.

காங்கிரஸுக்கு 25, கூடுதலாக கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதி வழங்கியுள்ளார், மு.க.ஸ்டாலின். இதேபோல இதுவரை கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளின் எண்ணிக்கை, 23 தொகுதிகளுடன் 25 சேர்த்தால், திமுக கைவசம் 186 தொகுதிகள் இருக்கின்றன. மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சிக்கு அதிகபட்சமாக 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டாலும் கூட, 180 தொகுதிகளில் திமுக நேரடியாக போட்டியிடும்.

இதில், பெரும்பான்மைக்கு கூடுதலான தொகுதிகளில் வெற்றிப் பெற்றால்தான், மத்திய பாஜக அரசின் சித்துவேலைகளில் இருந்து திமுக அரசு நிலைத்து நின்ற 5 ஆண்டு கால ஆட்சியையும் நிறைவு செய்ய முடியும் என்பதில் இந்த நிமிடம்வரை உறுதியாக இருக்கிறார் மு.க.ஸ்டாலின் என்பதே, திமுக தலைவருக்கு மட்டுமல்ல, கூட்டணிக்கு தலைமை ஏற்பதற்கும் தனக்கு முழு தகுதி இருக்கிறது என்பதை நிரூபித்துவிட்டார் மு.கஸ்டாலின் என்கிறார்கள், தேர்தல் கள அரசியலில் ஆழ்ந்த அனுபவமிக்க மூத்த ஊடகவியலாளர்கள்.

கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சிகளுக்கும் தொகுதிகள் வழங்க வேண்டும். இந்த கட்சிகளுக்கு தலா 2 மற்றும் ஒரு தொகுதி என்ற அடிப்படையில் வழங்கினாலும், இந்த இரண்டு கட்சிகளும் உதயச்சூரியன் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்படும். ஏற்கெனவே மதிமுக போட்டியிடவுள்ள 6 தொகுதிகளிலும் உதயசூரியன் சின்னத்தில்தான் களம் காணப்போகிறது என்பதால், திமுக மொத்தமாக 180 தொகுதிகளில் போட்டியிடப் போகிறது.

தற்போதை நிலையில், அதிமுக பாஜக கூட்டணி வீழ்த்த 180 தொகுதிகளில் திமுக நேரடியாக போட்டியிட்டால்தான், அக்கட்சி தொண்டர்கள் உற்சாமாக தேர்தல் பணியை ஆற்றுவார்கள் என்ற இரண்டாம் கட்டதலைவர்களின் ஆலோசனைகளை முழுமையாக நிறைவேற்றி வைக்கிறார் என்று புகழ்ந்து பேசுகிறார்கள், திராவிட சிந்தாந்த பற்றாளர்கள்.

காங்கிரஸே 25 தொகுதிகளுக்கு ஒப்புக் கொண்டு தொகுதி பங்கீட்டில் கையெழுத்து விட்டுவிட்டது. ஆனால், அதிமுக கூட்டணியில் உள்ள தேமுதிக, அதே அளவுக்கான தொகுதிகளை தர வேண்டும் என்று அதிமுக தலைமைக்கு மிரட்டலாக எச்சரிக்கை விடுக்கும் வகையில் பேசு வருகிறது. இதன் மூலம் அதிமுக தலைமை பலவீனமாக இருக்கிறதா? என்று கோபத்தோடு கேள் எழுப்புகிறார் அக்கட்சியின் முன்னணி தலைவர்கள்…