சரக்கு சங்கரா.. சவுக்கு சங்கரா என்ற குழப்பம் ஏற்படும் அளவுக்கு யூ டியூப்பர் சங்கரைப் பற்றி வெளியான தகவல்கள் அனைத்துமே அருவருப்பானவை.
சமூக ஊடகங்களில் கருத்து வெளியிடுவதாக இருந்தாலும், தனிப்பட்ட வாழ்க்கையில் பெண்களுடனான தொடர்புகள் ஆனாலும், சங்கருக்கு காமத்தை தவிர பெண்களின் மீதான பார்வை மதிப்பிற்குரியவையாக இருந்ததே இல்லை என்று சொல்லும் அளவுக்கு எண்ணற நிகழ்வுகள் சாட்சியாக இருக்கின்றன.
தாலி கட்டிய மனைவியையும், பச்சிளம் குழந்தையையும் பட்டினி போட்டு துன்புறுத்தி கொடூரமாக சித்ரவதை செய்தவர்தான் சங்கர் என்ற குற்றச்சாட்டுகள், நீதிமன்றம் வரை சென்றதோ, அதேபோல, பல ஆண்டுகளாக கணவன், மனைவியாக பழகி, நடிகை விஜயலட்சுமியை ஆண்டு கணக்கில் உடல் ரீதியாக பயன்படுத்திக் கொண்டவர் சீமான் என்ற குற்றச்சாட்டும் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து கொண்டிருக்கிறது.
உடல் இச்சைக்கு பெண்களை பயன்படுத்திக் கொள்வதில் எந்த கட்டுப்பாடும் இல்லாதவர்களாகதான் சவுக்கு சங்கரும், நடிகர் சீமானும் இருந்திருக்கிறார்கள் என்பதும் இருந்து வருகிறார்கள் என்பதும் இருவருக்கும் எதிராக அவர்களின் எதிரிகளே கூறாத குற்றச்சாட்டுகளை எல்லாம் சங்கருடனும் சீமானுடனும் நெருங்கி பழகியவர்களே மனம் நொந்து போய் கூறுவதுதான் கவலைக்குரியதாகும்.
சவுக்கு சங்கர் பணத்திற்கு ஆசைப்பட்டு சரக்கு சங்கராக மாறியது மட்டுமின்றி, சட்டப்பூர்வமாக முதல் மனைவியிடம் இருந்து விவாகரத்து கிடைப்பதற்கு முன்பாகவே சட்டத்திற்கு விரோதமாக இரண்டாவது மனைவியுடன் வாழ்ந்து வந்ததும் மூன்று கோடி ரூபாய் மதிப்பிலான பங்களா வீட்டை காதல் பரிசாக வழங்கியிருப்பதும் காவல்துறையினரால் அம்பலமாகி, பொதுவெளியில் சிரிப்பாய் சிரித்தது.
சங்கரின் குருநாதர் போலவே மாறிவிட்ட நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், முதல் காதலியான விஜயலட்சுமியிடம் பல லட்சம் ரூபாயை களவாடியிருந்தாலும் கூட, நினைவு தப்பிய நேரத்தில் கூட வேறு எந்தவொரு பெண்ணிற்கும் சில நூறு ரூபாயைக் கூட செலவழித்தவர் இல்லை என்பதும் பொதுவெளியில் சீமானின் மானத்தை பறக்க விட்டுவிட்டது.
தனிமனித வாழ்க்கையாக இருந்தாலும் பொது வாழ்க்கையாக இருந்தாலும் கூட சீமானுக்கும் சரக்கு சங்கருக்கும் ஒழுக்கத்துடன் வாழ வேண்டும் என்ற எண்ணம் சிறிதளவும் இருந்தது இல்லை என்பதை வெட்ட வெளிச்சமாக்கும் வகையில் படுகேவலமான தகவல்கள் வெளியாகி சந்தி சிரிக்க வைத்துவிட்டது.
அறத்தோடு செயல்பட வேண்டிய பத்திரிக்கைத்துறையை கையில் எடுத்த சரக்கு சங்கர், கடந்த பத்தாண்டுகளில் ஆபாசமாக பேசிய பேச்சுகள் தான் அதிகம். அதற்கு இணையாகவே, திமுக, அதிமுக, பாஜக என்று ஒரு கட்சியை ஆதரித்துவிட்டு பிறகு அதே கட்சியை எதிர்ப்பது என பச்சோந்தி போல, எலும்புத்துண்டுகளாக தூக்கி எறியும் பணத்திற்கு ஆசைப்பட்டு, ஊடகத்துறைக்கே களங்கத்தை ஏற்படுத்தியவர்தான் சரக்கு சங்கர் என்று மனம் நொந்து கூறுகிறார்கள் மூத்த ஊடகவியலாளர்கள்.
2011 முதல் 2021 வரை பத்து ஆண்டுகள் ஆளும்கட்சியாக இருந்த அதிமுக மீது விமர்சனங்களை முன் வைத்த சரக்கு சங்கர், பிரதான எதிர்க்கட்சியான திமுகவுக்கு ஆதரவாக பேசுவதற்கு இரண்டாம் கட்ட திமுக தலைவர்களிடம் லஞ்சமாக பணம் பெற்றிருக்கிறார் என்று சங்கரின் சிஷ்ய பிள்ளைகளே மனம் நொந்து யூ டியூப்புகளுக்கு பேட்டி அளித்துள்ளார்கள்.
2021 ம் ஆண்டில் இருந்து ஆளும்கட்சியான திமுகவை எதிர்த்து பேட்டி கொடுப்பதற்கும் எழுதுவதற்கும் அதிமுக முன்னாள் அமைச்சர்களிடம் லட்சக்கணக்கில் பணம் பெற்றவர்தான் சரக்கு சங்கர் என்று அவரது வங்கிக் கணக்கு விபரங்களை வெளியிட்டு அதிர்ச்சி கொடுத்திருக்கிறது தமிழ்நாடு காவல்துறை.
கடந்த பத்து ஆண்டுகளுக்கு மேலாக, திமுகவையும் அதிமுகவையும் எப்படி மாறி மாறி திட்டி வயிற்றை கழுவிக் கொண்ட சரக்கு சங்கர், தமிழ்நாடு பாஜகவையும், பிரதமர் மோடியையும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும் கடுமையாக விமர்சனம் செய்து, இந்துத்துவாவுக்கு எதிரி என்று தன்னை காட்டிக் கொண்டு பகுத்தறிவுவாதிகளின் ஆதரவையும் பலப்படுத்திக் கொண்டார்.
அதிமுகவோ… திமுகவோ.. எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும் கைது, சிறை என தண்டனை அனுபவிக்க நேரும் போது, சங்கர் சரணகாதி அடைவது சீமானிடம்தான்.
சங்கரைப் போலவே சீமானுக்கும் நற்பண்புகள் இல்லாததால், தாங்கள் செய்வதுதான் நியாயம் என்ற அடிப்படையில், இரண்டு பேருமே, ஜனநாயகத்தை கேலிக்குரியதாக்கும் வகையில்தான் நீதிமன்ற நடவடிக்கைகளின் போது அறமற்ற வகையில் நடந்து கொண்டிருக்கிறார்கள்.
சீமானைப் போலவும் சரக்கு சங்கரைப் போலவும் சாதாரண மனிதர்கள் நடந்து கொண்டால், அவர்களுக்கு எதிராக கடுமையான தண்டனைகள் தான் கிடைக்கும். காவல்துறையோ, நீதிமன்றமோ சிறிதளவு கூட கருணை காட்டாது. மாதக்கணக்கில் சிறையில்தான் வாட வேண்டியிருக்கும்.
சரக்கு சங்கர் மீது தமிழ்நாடு காவல்துறை வீசிய குண்டர் தடுப்பு சட்டம் செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்திருப்பதை, ஜனநாயகவாதிகள் பலர் வரவேற்றுக் கொண்டிருக்கிறார்கள்.
காவல்துறையில் பணியாற்றி வரும் பெண் அலுவலர்களின் கண்ணியத்தை கேவலப்படுத்தும் வகையில் பேசியதால்தான் அவர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது.
இதற்கு முன்பும் கூட, நீதிபதி இல்லங்களில் பணியாற்றும் பெண் பணியாளர்களின் கற்பை பற்றி அவதூறாக பேசியதால்தான் நீதிமன்றத்தாலேயே நேரடியாக தண்டிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அப்போதும் அவருக்கு கருணை காட்டியதும் நீதிமன்றம்தான்.
ஒரே ஒரு குற்றத்தை திரும்ப திரும்ப செய்கிறவன், ஒரு போதும் திருந்தவே மாட்டான் என்பதால்தான் சங்கருக்கு எதிராக குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது.
இரண்டு முறை சவுக்கு சங்கர் சிறைவாசியாக மாறியதற்கு அடிப்படை காரணமே, மத்திய, மாநில அரசுக்கு எதிராக பேசியதால் எழுந்த சர்ச்சை இல்லை. இரண்டு முறையுமே காவல் மற்றும் நீதித்துறை பெண் பணியாளர்களின் கற்பிற்கு களங்கம் ஏற்படுத்தியதால்தான் சவுக்கு சங்கர் சிறைக்குப் போனார். மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக பேசுவதற்கும், பொது வாழ்க்கையில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டிருக்கும் பெண்களைப் பற்றி தரக்குறைவாக பேசுவதற்கும் வித்தியாசம் இல்லையா என்ற கேள்விகளை முன்வைக்கும் பெண் இலக்கியவாதிகள், யூ டியூப் போன்ற சமூக ஊடகங்களில் எந்தவிதமான ஆதாரமும் இன்றி பேசுவதையே வழக்கமாக கொண்டிருப்பவர்களுக்கு சாதாரண தண்டனை சரியான புத்தியை தந்துவிடாது என்று குமறுகிறார்கள்.
சங்கர் பேசியதால் பொது அமைதிக்கு என்ன பாதகம் ஏற்பட்டுவிட்டது என்று உயர், உச்ச நீதிமன்றங்கள் நெற்றிக்கண்ணை திறக்கிறது. நீததுறை, காவல்துறையில் பணியாற்றுகிற பெண் அலுவலர்கள், பதவி உயர்வுக்கும் பணியிட மாற்றத்திற்கும் கற்பை விலையாக கொடுக்கிறார்கள் என்று சரக்கு சங்கர் பேசியது, வேலைக்கு செல்லும் அனைத்து தரப்பு பெண்களின் மனதை எந்தளவுக்கு பாதிக்கும் என்பதை நீதிமன்றங்கள் கவனத்திலேயே எடுத்துக் கொள்ள மறுப்பது எவ்வளவு ஆபத்தானது என்று பெண்ணியவாதிகள் ஆவேசத்துடன் கேள்விகளை எழுப்புகிறார்கள்.
சரக்கு சங்கரைப் போல, பொது வெளியில் ஆண்கள் அன்றாடம் பேச ஆரம்பித்தால், வேலைக்கு செல்லும் பெண்கள், நிம்மதியாக நடமாட முடியுமா என்பதை பற்றி நீதிபதிகள் சிந்திக்காமல் தீர்ப்பு கூறுவது, நிகழ்காலத்திலேயே பேராபத்தை விளைவித்துவிடும் என்று கதறுகிறார்கள் சமூக ஆர்வலர்கள்.
சரக்கு சங்கருக்கு எதிரான குண்டர் தடுப்பு சட்டத்தை ரத்து செய்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதால், சங்கரைப் போல அவதூறுகளை பரப்பி வரும் நான்காம் தர யூ டியூப்பர்களுக்கு கொண்டாட்டமாகவே அமையும் என்று எச்சரிக்கை செய்கிறார்கள் அரசியல் திறனாய்வாளர்கள்.
சிறையில் தண்டனை அனுபவித்துக் கொண்டிருக்கும் சவுக்கு சங்கரால் பெண் குலத்திற்கு எந்தளவுக்கு களங்கம் ஏற்படுத்தப்பட்டு இருக்கிறேதா.. அதே அளவுக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானாலும், அரசியல் மற்றும் பொது வாழ்க்கையில் ஈடுபட்டிருக்கும் பெண்கள் மீது களங்கம் கற்பிக்கும் வகையிலேயே சீமானின் பேச்சும், அவரது செயல்பாடுகளும் அமைந்திருப்பதாக குற்றம் சுமத்துகிறார்கள் ஜனநாயகவாதிகள்.
பெண்கள் பற்றிய பார்வை சீமானுக்கு எப்படியிருக்கிறது என்பதற்கு அவரது பேச்சையே உதாரணமாக காட்டும் நீதித்துறையைச் சேர்ந்த நிபுணர்கள், நித்தியானந்தா ஆசிரமத்தில் ஆன்மிக பணியில் ஈடுபட்டிருக்கும் வெள்ளையாக இருக்கும் வெளிநாட்டு பெண்கள் மீதான மோகத்தை வெளிப்படையாக கூறியிருக்கிறார் சீமான் என்று சுட்டிக்காட்டுகிறார்கள்.
வெள்ளையாக இருக்கும் பெண்கள் சீமானுக்கு காமம் அதிகமாக இருப்பதே மனநோய் என்று கதறும் நாம் தமிழர் கட்சி பெண் நிர்வாகிகள், கறுப்பாக இருக்கும் காளியம்மாள் பற்றிய சீமானின் அவதூறும் கூட தரம் தாழ்ந்தவைதான் என்று பொங்குகிறார்கள். விளிம்பு நிலையில் இருந்து புரட்சிப்பெண்ணாக எழுந்து ஆளும்கட்சிகளுக்கு எதிராக ஆவேசமாக களமாடிய காளியம்மாளை, வீராங்கனையை கொண்டாடுவதைப் போல சீமான் கொண்டாடி இருக்க வேண்டும்.
பொதுக்கூட்டங்களில் தனக்கு கிடைக்கும் ஆதரவுக்கு மேலாக காளியம்மாளை நாம் தமிழர் கட்சியினரும் பொதுமக்களும் ஆரவாரமாக ஆதரிக்கிறார்களே என்ற ஆத்திரத்தில், காளியம்மாளை பிசிறு என்று கண்ணியக்குறைவாக பேசிய சீமான், நாம் தமிழர் கட்சியில் இருந்து காளியம்மாளை விரைவாக விரட்டியடிக்க வேண்டும் என்ற வன்மத்தை காட்டியிருப்பதை பார்க்கும் போது, தரம் கெட்ட மனிதர் சீமான் என்றுதான் கடுமை காட்ட வேண்டியிருக்கிறது என்கிறார்கள் நாம் தமிழர் கட்சி பெண் நிர்வாகிகள்.
தமிழ் தேசியம் எனும் மாபெரும் சித்தாந்தத்தை முன்வைத்து தமிழகத்தில் அரசியலை மாற்றியமைக்க முயற்சிக்கும் சீமானிடம், எவ்வளவு முற்போக்கான சிந்தனை இருக்க வேண்டும். பெண்கள் மீதும் போதை பானங்கள் மீதும், பணத்தின் மீதும் சீமானுக்கு இருக்கும் ஆசையை போலவே அவரது கட்சியில் உள்ள அனைத்து நிர்வாகிகளுக்கும் இருக்குமானால் நாம் தமிழர் கட்சியில் இளம் பெண்கள் பாதுகாப்பாக அரசியல் செய்ய முடியுமா என்று கேள்விகளை முன் வைக்கிறார்கள் இளம்தலைமுறை அரசியல்வாதிகள்.
சவுக்கு சங்கருக்கு ஆபத்து ஏற்படும் போதெல்லாம், சீமானின் ஆதரவை தான் தேடிப் போகிறார். சவுக்கு சங்கரின் வழிகாட்டுதல்களோடு யூ டியூப் சேனலை நடத்தி வரும் பெலிக்ஸும், சங்கருக்குரிய கேவலமான புத்தியை வெளிப்படுத்தியதால்தான் சிறை தண்டனையை அனுபவித்தார். ஏறத்தாழ மூன்று மாத கால சிறைத்தண்டனையை அனுபவித்த பிறகும் கூட பெலிக்ஸுக்கு புத்தி வரவில்லை என்பதுதான் வருத்தத்திற்குரியது என்கிறார்கள் அவரோடு சமகாலத்தில் காட்சி ஊடகத்தில் பணியாற்றிய மூத்த ஊடகவியலாளர்கள்.
சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்த பெலிக்ஸ், சவுக்கு சங்கரின் தீய குணத்தை போலவே தான் தனக்கும் இருக்கிறது என்பதை நிரூபிக்கும் வகையில் சீமானை தான் முதலில் சந்தித்து ஆதரவு திரட்டியிருக்கிறார்.
சீமான், சவுக்கு சங்கர், பெலிக்ஸ் ஆகிய மூவருமே, தமிழ்நாட்டில் நாகரிகமாக அரசியல் செயல்பாடுகள் இருக்க வேண்டும் என்பதற்காக போராடுபவர்கள் இல்லை. திராவிட இயக்க ஆட்சிகள், தமிழ் மக்களுக்கு துரோகம் இழைத்துக் கொண்டிருக்கின்றன என்ற குற்றச்சாட்டை முன்வைப்பதற்கு மூவருக்கும் எந்தவிதமான தகுதியும் இல்லை என்று திட்டவட்டமாக கூறுகிறார்கள் திராவிட அரசியலுக்கு மாற்றாக புதிய அரசியலை முன்னெடுத்திருக்கும் ஜனநாயவாதிகள்.