Tue. Dec 3rd, 2024

வீட்டை கட்டிப் பார்..கல்யாணம் பண்ணி பார்.. என்பார்கள் முன்னோர்கள்.. மனித வாழ்வின் மகத்தான தருணங்களாக இரண்டு விழாக்கள் அமைந்திருந்தாலும்கூட, அதனை எதிர்கொள்ளும்போது ஏற்படும் சிரமங்களை சொல்லி மாளாது. கடந்த நூற்றாண்டுகளில் முன்னோர்கள் எதிர்கொண்ட சிரமங்களைப் போல, இன்றைக்கு காலம் அவ்வளவு கடினமானதாக இல்லை. சிறப்பு தொகுப்பு எனும் பேக்கேஜ் சிஸ்டம் அறிமுகமான பிறகு புதிய வீடு கட்டுவதும் திருமண விழாவை நடத்துவது என்பதும் மிக,மிக எளிதான செயலாக மாறியிருப்பதுதான் அதிசயம் என்றும் கூறலாம்.. அதிர்ஷ்டம் என்றும் விளிக்கலாம்..

பணம் கையில் இருந்தால் போதும்.. சிக்கனமாக, அதே சமயம் வீண் செலவுகளை தவிர்ப்பதற்கும் சிறிது கவனம் செலுத்தினால் போதும். திருமண விழாவுக்கு மணமகனையோ, மணமகளையோ தேர்வு செய்வதற்கு தொழில்நுட்பம் கைகொடுப்பதைப் போலவே, திருமணவிழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளை செய்வதற்கும் Event Manger எனப்படும் சிறப்பு ஏற்பாட்டாளர்கள் நகரம், கிராமம் என வித்தியாசமில்லாமல் எங்கும் நிறைந்திருக்கிறார்கள்.

திருமண விழாவைப் போலவே துன்பப்படாமல், புதிய வீடு கட்டுவதற்கும் இன்றைக்கு எண்ணற்ற வசதிகள் வந்துவிட்டன. கட்டட ஒப்பந்ததாரர்கள் நிறைந்திருக்கும் இன்றைய உலகத்தில், புதிய வீட்டை கட்டுவதற்கும், பராமரிப்பதற்கும் சிறப்பு முகாம்கள் அடிக்கடி நடைபெற்றுக் கொண்டே இருக்கின்றன. புதிய வீடு கட்டுவதற்கு தேவையான பொருட்களை தேர்வு செய்வதற்கு, புகழ்பெற்ற நிறுவனங்களே நேரடியாக சிறப்பு கண்காட்சிகளை நடத்தி வருகிறது. அந்தவகையில், புதிய வீடுகளை அழகுற காட்சிப்படுத்துவற்கும் புகழ்பெற்ற பெயின்ட் நிறுவனங்கள் நேரடியாக பொதுமக்களை தேடி வந்துக் கொண்டிருக்கின்றன.

பொதுமக்கள் பணத்தை விரயம் செய்யக் கூடாது என்ற நல்லெண்ணத்தில், DR.FIXIT WATERPROOFING EXPERT நிறுவனம், விழிப்புணர்வு கண்காட்சிகளுக்கு ஏற்பாடு செய்து வருகிறது. அதன்படி, சென்னை தாம்பரம் அருகே சேலையூரில் நடைபெற்ற சிறப்பு விழிப்புணர்வு முகாமில் கட்டட பொறியாளர்கள், கட்டுமான ஒப்பந்ததாரர்கள், ஹார்டுவேர்ஸ் விற்பனை உரிமையாளர்கள், கட்டட மேஸ்திரிகள், பெயின்ட்டர்கள் என 300க்கும் மேற்பட்டோர்கள் கலந்துகொண்டார்கள்.

சிறப்பு கண்காட்சிக்கு வருகை தந்த அனைவரையும் DR.FIXIT நிறுவனத்தின் மண்டல சந்தைப்படுத்துதல் மேம்பாடு மேலாளர் (Regional marketing development manager) திரு. ஜான்றிஸ் கிருபாகரன் புன்முறுவலுடன் வரவேற்பு கண்காட்சியை சுற்றி காண்பித்தார்.

டாக்டர்பிக்ஸ்இட்டின் புதிய ஃபார்முலா மூலம் தயாரிக்கப்பட்டுள்ள பிரத்யேக ரசாயன கலவைகள் மூலம் குறைந்த செலவில் நீர்க்கசிவு மற்றும் சுவர் விரிசல் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண்பதற்கான வழிமுறைகளை குறித்து விரிவாக எடுத்துரைத்தார் திரு. ஜான்றிஸ் கிருபாகரன்.

புதியதாக வீடு கட்டும்போதே, (1) தரை தளம் BELOW GROUND, (2) குளியல் மற்றும் சமையல் அறை Bathroom/Kitchen, (3) மேற்கூரை (அ) மேல்தளம் Roof (4) குடிநீர் தொட்டி Water tank (5) வெளிப்புறச் சுவர் Exterior walls என ஐந்து பகுதிகளில் டாக்டர்பிக்ஸ்இட்டின் பிரத்யேக ரசாயன கலவைகளை பயன்படுத்தினால், கட்டடம் தரமானதாகவும், பாதுகாப்பாகவும் இருக்கும் என்று ஆலோசனைகளை வழங்கியதுடன், எல்டயுள்யூபிளஸ்(DR.FIXIT LW+, யூஆர்பி (DR.FIXIT URP), பிட்டுஃபிக்ஸ்(Bitufix), ஆல்சீல்(All seal),பிட்ஃபின்2கே(Pidifin 2k), ஃபாஸ்டஃப்ளக்ஸ்(Fastflex), ரெயின்கோட்என்ஈஓ(Raincoat Coool), ரூஃப்சீலிங் கிளாசிக்கல்(Roofseal Flex), ரெயின்கோட்(Raincoat ஆகிய பெயர்களில் உள்ள ரசாயன கலவை மற்றும் பவுடர்களை எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்தும் திரு. ஜான்றிஸ் கிருபாகரன் மற்றும் பணியாளர்கள் செயல்முறை விளக்கம் அளித்தனர்.

டாக்டர்பிக்ஸ்இட்டின் பிரதான நோக்கமே, புதிய வீடோ அல்லது அடுக்குமாடி குடியிருப்போ கட்டிய பிறகு, சில மாதங்களில் தலைதூக்கும் நீர்க்கசிவு, சுவர் விரிசல் போன்றவற்றுக்கு இரண்டாவது முறையாக செலவு செய்ய வேண்டியிருப்பதை தடுப்பதற்குதான் முன்னுரிமை தருகிறது என்றும் எடுத்துரைத்தார்.

“புதிய வீட்டின் உள்பகுதி மற்றும் குளியலறைகளில் நீர்க்கசிவு என்பது இன்றைக்கு உரிமையாளர்களுக்கு பெரும் பிரச்னையாக உள்ளது. அன்றாட வாழ்வின் நிம்மதியை குலைக்கும் இந்தப் பிரச்னைகளுக்கு நிரந்தர தீர்வு காண்பதற்காக, வரும்முன் காக்கும் வகையில் டாக்டர்எக்ஸ்இட் நிறுவனம், புதிய ஃபார்முலாவை பயன்படுத்தி ரசாயன கலவைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. புதிய வீடு கட்டும் போதே ஐந்து பகுதிகளில் வாட்டர்ப்ரூஃப் பெயின்ட் அடித்தால், கட்டடத்தின் எந்தப் பகுதியிலும் நீர்க்கசிவு என்ற பிரச்னையே ஏற்படாது. மேலும், சுவர் விரிசல், இரும்பு துருப் பிடித்தல் ஆகியவற்றில் இருந்தும் நிரந்தர தீர்வு கிடைத்துவிடும். கட்டட சுவர்களின் வெளிப்புறத்தில் பெயின்ட்டை ஒருமுறை அடித்துவிட்டு, அதற்கடுத்ததாக வாட்டர்ப்ரூஃப்பை இரண்டாவது முறையாக பூசுவதற்குப் பதிலாக, ஒரே செலவில் வாட்டர்ப்ரூஃப் பெயின்ட் எனும் , கட்டடத்தின் உறுதித்தன்மை ஆயுள் முழுவதும் நீடித்து நிற்கும்” என்று தெரிவித்தார் ஜான்றிஸ் கிருபாகரன்.

This image has an empty alt attribute; its file name is WhatsApp-Image-2024-07-31-at-10.05.30-PM-1024x768.jpeg


சில ஆயிரம் ரூபாய் செலவில் நீர்க்கசிவு, கட்டட விரிசல், இரும்பு துருப்பிடித்தல் ஆகிய பிரச்னைகளுக்கு நிரந்தர தீர்வை ஏற்படுத்தும் வகையில் டாக்டர் பிக்ஸ்இட் புதிய ஃபார்முலா மூலம் ரசாயன கலவைகளை தயாரித்துள்ளது. புதிய வீடு கட்டுபவர்களின் வசதிக்காக கள ஆய்வு, ஆலோசனைகளை எவ்வித கட்டணமும் இன்றி டாக்டர் பிக்ஸ்இட் நிறுவனம் வழங்கி வருகிறது என்றும் சென்னை கோபாலபுரத்தில் DR.FIXIT WATERPROOFING EXPERT தலைமை அலுவலகத்தில் சிறப்பு பிரிவு செயல்பட்டு வருவதாகவும் திரு. ஜான்றிஸ் கிருபாகரன் தெரிவித்தார்.

விரிவான தகவல்களுக்கும் நேரில் ஆலோசனைகளை பெறுவதற்கும் திரு. ஜான்றிஸ் கிருபாகரன் அவர்களை தொடர்பு கொள்ளலாம்.. கைபேசி எண்…7397 494 025