Sat. Nov 23rd, 2024

புதுச்சேரியில் கடந்த பல நாட்களாக பரபரப்புக்கு பஞ்சம் வைக்காத அரசியல் விளையாட்டு, இன்று முடிவுக்கு வந்தது.

இன்று காலை சட்டமன்றம் கூடியதும், தனது அரசு மீது நம்பிக்கைகோரும் தீர்மானத்தை முன்மொழிந்தார், முதலமைச்சர் நாராயணசாமி. ஆனால், பெரும்பான்மையை நிரூபிக்க தவறியதால் நாராயணசாமி அரசு பெரும்பான்மையை இழந்ததாக சபாநாயகர் அறிவித்தார். 

முன்னதாக, நம்பிக்கை வாக்கு கோரும் தீர்மானத்தை முன்மொழிந்து பேசினார், முதல்வர் நாராயணசாமி.. அவரின் உருக்கமான, அதே சமயம், சட்டமன்றத்தின் கடைசி உரையாக அமைந்த பேச்சின் விவரம்…

புதுச்சேரியை மத்திய அரசு வஞ்சித்துள்ளது உறுதியாகிவிட்டது.

இந்தியை திணிக்க முயற்சித்தது. ஆனால் நாங்கள் இருமொழிக்கொள்கையை கடைபிடிக்கிறோம்.

பல மாநிலங்களுக்கு 41% வரி கொடுத்தார்கள். ஆனால் புதுச்சேரிக்கு 21% வரி மட்டுமே கொடுத்தார்கள்.

எங்கள் ஆட்சி மீது புதுச்சேரி மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர் என்பது தெளிவாக தெரிகிறது.

கிரண்பேடி அளித்த நெருக்கடியை கடந்தும் ஆட்சியை நிறைவு செய்துள்ளோம்.

எவ்வளவு இன்னல்கள் வந்தாலும் புதுச்சேரி மக்களுக்காக இரவு பகல் பாராமல் போராடினோம்.

4 ஆண்டுகளாக எங்களை எதிர்கொள்ள முடியாத எதிர்க்கட்சிகள் தற்போது அஸ்திரங்களை எடுத்துள்ளன.

மக்களால் புறக்கணிக்கப்பட்டவர்கள் ஒன்றிணைந்து ஆட்சியை கவிழ்க்க முயன்றார்கள்.

புதுச்சேரி மாநிலத்தின் வளர்ச்சியை தடுக்க பிரதமர் மோடி தலைமையிலான அரசு திட்டமிட்டு செயல்பட்டது.

புதுச்சேரி மாநிலத்திற்கு கிடைக்க வேண்டிய நிதியை மத்திய அரசு தரவில்லை.

இலவச அரிசி வழங்குவது உள்ளிட்ட அனைத்து திட்டங்களையும் மத்திய அரசு தடுத்தது.

பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலையை உயர்த்தியதே மத்திய அரசின் சாதனை.

சிபிஐ, அமலாக்கத்துறை, வருமானவரித்துறையை கொண்டு ரெய்டு நடத்தியதால் சிலர் ஓடிப்போனார்கள்.

இவ்வாறு முதலமைச்சர் நாராயணசாமி பேசினார்.