புதுச்சேரி துணை நிலை ஆளுநர் பதவியில் இருந்து கடந்த வாரம் நீக்கப்பட்டார் முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி கிரண்பேடி. ஆந்திர ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், கூடுதல் பொறுப்பாக புதுச்சேரி துணை ஆளுநர் பதவியை கவனித்து வருகிறார். பதவி பறிக்கப்பட்ட பிறகும் சில நாட்களாக புதுச்சேரியிலேயே தங்கியிருந்த கிரண்பேடி, தனது உடைகளுடன் இன்று காலை புதுச்சேரியில் இருந்து புறப்பட்டார்.
கொட்டும் மழையிலும் அவரை, ஆளுநர் மாளிகை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் வழியனுப்பி வைத்தனர். புதுச்சேரி பாசம் அவரை விட்டுப் போகவில்லை என்பதற்கு கடைசி நேரத்திலும் புதுச்சேரியின் வளர்ச்சியில் அவர் காட்டிய அக்கறை மூலம் தெரிந்து கொள்ளலாம்..
இந்தியாவின் முதல் பெண் ஐ.பி.எஸ். அதிகாரியை, தாமாக முன்வந்து பதவி விலக வைத்து, நாகரிகமாக, மனம் புண்படாமல் அனுப்பி வைத்திருந்தால், சந்தோஷமாக கிளப்பியிருப்பார் கிரண்பேடி.