Tue. Apr 30th, 2024

நோ பால் சர்ச்சை: நடத்தை விதிகளை மீறியதற்காக டெல்லி கேபிட்டல்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பண்ட்-க்கு 100% அபராதம் விதிக்கப்பட்டது..

நேற்று நடைபெற்ற டி20 ஐபிஎல் போட்டியில் நடத்தை விதிகளை மீறியதற்காக டெல்லி கேபிட்டல்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் போட்டி கட்டணத்தில் 100% அபராதம் விதித்ததுள்ளதாக ஐபிஎல் நிர்வாகம் அறிவித்துள்ளது.

நேற்றைய ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 20-வது ஓவரில் மெக்காய் வீசிய 3-வது பந்து பேட்டர் போவெல் இடுப்பு உயரம் வீசப்பட்டு, கள நடுவர் நோ பால் கொடுக்காததால் மைதானத்தில் சலசலப்பு ஏற்பட்டது.

இதனிடையே மைதானத்துக்கு வெளியே இருந்த டெல்லி அணியின் கேப்டன் பண்ட் விரக்தி அடைந்து பேட்டர்களை களத்தை விட்டு வெளியேற அறிவுறுத்தியது பேசு பொருளாகியது.

டெல்லி அணியின் வீரர் ஷர்துல் தாக்கூருக்கு போட்டி கட்டணத்தில் 50% அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

டெல்லி அணியின் உதவிப் பயிற்சியாளர் பிரவின் ஆம்ரேவுக்கு போட்டிக் கட்டணத்தில் 100% அபராதம் மற்றும் ஒரு போட்டியில் தடை விதிக்கப்பட்டுள்ளது.