Mon. Nov 25th, 2024

கரூர் காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி இன்று காலை கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் திடீரென்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மத்திய அரசின் நிதியுதவி மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்பட்டு வரும் நலத்திட்ட உதவிகள், கரூர் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள பயனாளிகளுக்கு முழுமையாக பெற்று தருவதில் கரூர் மாவட்ட ஆட்சியர் அலட்சியம் காட்டி வருவதாக ஜோதி மணி எம்.பி. தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார். இதுதொடர்பாக அவர், தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு ஐஏஎஸ்.ஸுக்கு எழுதியுள்ள கடிதத்திலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன் தொடர்ச்சியாக, இந்த விவகாரத்தில், கரூர் ஆட்சியர் மேற்கொண்டு நடவடிக்கைகள், மாற்றுத்திறனாளிகளுக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக குற்றம் சாட்டிய ஜோதிமணி எம்.பி., இன்று காலை திடீரென்று கரூர் ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து, உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டார்.

அவரது போராட்டத்திற்கு முடிவுக்கு கொண்டு வரும் வகையில் மாவட்ட ஆட்சியர் மருத்துவர் பிரபு சங்கர் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினார். ஆட்சியரின் விளக்கத்தை கேட்டு சமாதானம் அடையாத ஜோதிமணி எம்.பி. போராட்டத்தை தொடர்ந்தால், கரூரில் பரபரப்பு ஏற்பட்டது.