வானிலை நிலவரம்
வெப்பச் சலனம் காரணமாக தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 9 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
காஞ்சி, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என கூறியுள்ளது.தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, குமரி ஆகிய மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
கோயில் திருமணத்தில் கட்டுப்பாடுகள் :
கோயில்களில் திருமண நிகழ்ச்சிகளுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
கோயில்களில் நடைபெறும் திருமண நிகழ்ச்சிகளில் 50 பேர் மட்டுமே பங்கேற்க அனுமதி வழங்கப்படும் என இந்து சமய அறநிலையத்துறை தெரிவித்துள்ளது.
அனுமதிக்கப்பட்ட நேரத்தில் மட்டுமே நடைபெற வேண்டும்.
கோவில்களில் நடைபெறும் திருமணத்திற்கு 10 நபர்களுக்கு மேல் அனுமதி.
கோவில் மண்டபங்களில் நடைபெறும் திருமணத்தில் 50 பேருக்கு மேல் அனுமதி இல்லை என இந்து சமய அறநிலையத்துறை அறிவித்துள்ளது.
பத்திரப் பதிவு சிறப்பு சலுகை
அரசு முதன்மைச் செயலாளர் பீலா ராஜேஷின் உத்தரவு பேரில் மங்கள நாட்களில் பத்திரப்பதிவு அலுவலங்களை திறந்து வைக்க பத்திர பதிவு துறை உத்தரவிட்டுள்ளது.
சித்திரை திருநாள், தைப் பூசம்,ஆடிப் பெருக்கு போன்ற சிறப்பு நாட்களில் பத்திரப் பதிவு செய்து கொள்ள தமிழக அரசின் இந்த உத்தரவு வழிவகுக்கிறது.
திருக்கல்யாணத்திற்கு பக்தர்கள் அனுமதி
மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாண நிகழ்வு முடிந்தவுடன் தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதிக்கப்படுவார்கள் என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
வரும் 15ஆம் தேதி முதல் 26ஆம் தேதி வரை சுவாமி புறப்பாடு நிகழ்வை காண பக்தர்களுக்கு அனுமதி இல்லை.
மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் வரும் 24ஆம் தேதி நடைபெறுகிறது.
24ஆம் தேதி திருகல்யாணம் முடிந்தவுடன் காலை 9.30 மணிக்கு மேல் 2.30 மணி வரை பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படும் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.