தூத்துக்குடியில் உள்ள சிப்காட்டில் சீகால் பின்னலாடை தயாரிப்பு நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தின் ஒரு பகுதியில் பற்றிய தீப் பொறி, மளமளவென அனைத்துப் பகுதிகளுக்கும் பரவி கொளுந்து விட்டு எரிந்தது. தகவலின் பேரில் விரைந்து வந்த தீயணைப்பு படையினர் பல மணிநேரம் கடுமையாக போராடி தீயை முழுமையாக அணைத்தனர்.
திடீரென்று நேரிட்ட இந்த தீ விபத்தில் சுமார் 10 கோடி ருபாய்க்கு மேலான பின்னலாடைகள் எரிந்து சேதமடைந்துள்ளதாக முதற்கட்ட தகவல் தெரிவிக்கிறது. தீ விபத்திற்கான காரணம் குறித்து தூத்துக்குடி காவல்துறையினர் தொடர் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.