தமிழக சட்டமன்றத்திற்கான வாக்குப்பதிவு ஏப்.6 ம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் 100 சதவிகித வாக்குப்பதிவை இலக்காக வைத்து தேர்தல் ஆணையம் விழிப்புணர்வு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக, தேர்தல் நாளன்று வாக்களிக்க விரும்பும் 80 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச கார் சேவையை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
சென்னை, திருச்சி,கோவை ஆகிய மாநகரங்களில் ஊபர் கார் சேவை நிறுவனத்துடன் இலவச சேவையை வழங்குகிறது தேர்தல் ஆணையம்.
பயனாளர் வீட்டிலிருந்து வாக்குச்சாவடிக்கு சென்று திரும்பும் வகையில் குறைந்தபட்சம் 5 கி.மீ.க்கு 100% கட்டண சலுகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பயனாளர்கள் கைபேசியின் மூலம் ஊபர் செயலி வழியாக இலவச சேவைக்கு முன்பதிவு செய்து கொள்ளலாம் என்றும் தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.