திருவள்ளூர் மாவட்டத்தில் திமுக மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்தார். அப்போது பேசிய அவர், மே மாதத்தி திமுக ஆட்சி அமைத்தவுடன் கொரோனோ நிவாரண நிதியாக ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கும் 4000 ஆயிரம் ரூபாய் நிவாரணமாக மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாளான ஜுன் 3 ஆம் தேதிவழங்கப்படும்.
நெசவாளர்களின் பொருளாதாரத்தை மேம்படுத்த, அவர்களுக்கு என தனியாக பிரத்யேக கூட்டுறவு வங்கி அமைக்கப்படும். நெசவாளர்கள் அனைவருக்கும் அடையாள அட்டை வழங்கப்படும். கைத்தறி நெசவாளர்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் இலவச மின்சாரம் 200 யூனிட்டில் இருந்து 300 யூனிட்டாக அதிகரித்து வழங்கப்படும்.
இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறினார்.