Sat. Nov 23rd, 2024

அன்றாடம் யாசித்து வாழ்க்கையை கடத்துவர்களை விட கேவலமான வாழ்க்கையை வாழ்ந்துக் கொண்டிருக்கும் சவுக்கு சங்கருக்கு நாளுக்கு நாள் கொழுப்பு அதிகமாகி கொண்டே வருவதை, அவன் எடுக்கும் வாந்திகள் மூலம் வெளிச்சத்திற்கு வந்துக் கொண்டிருக்கிறது.

அவனை பேட்டி கண்டு வயிற்றுப் பிழைப்பை நடத்திக் கொண்டிருக்கும் யூ டியூப் சேனல்கள் வேண்டுமானால் சவுக்கு சங்கரை தலையில் தூக்கி வைத்து கொண்டாடலாம். ஆனால், ஊடகத்துறையை வாழ்வியலாக கொண்டவர்கள், ஒருபோதும் கேடுகெட்ட ஜென்மத்தை ஒருபோதும் பொருட்டாகவே மதிக்க மாட்டார்கள்.

 ஊடகவியலாளர் என்ற போர்வையை போர்த்திக் கொண்டு, காசுக்காக எதையும் செய்யும் தீய குணத்துடன் கேவலமான வாழ்க்கையை கடத்துபவர், தன் இழிநிலையை மறைக்க பிறரை குறை சொல்வதையே வாடிக்கையாக கொண்ட சவுக்கு சங்கர், அரசியல்வாதிகளை தரக்குறைவாக விமர்சனம் செய்வதைப் போல, மிகுந்த அனுபவமிக்க ஊடகவியலாளர்களையும் கேவலப்படுத்துவது அவ்வப்போது தலைதூக்குகிறது.

இதுபோன்ற மலிவான செயல்களுக்கு உடனுக்குடன் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்றால், ஊடகவியலாளர்கள் எல்லோரையுமே தரக்குறைவாக விமர்சனம் செய்வதை அவன்(சவுக்கு சங்கர்) தொடர்ந்து செய்து கொண்டே இருப்பான்.

யூ டியூப்பர்களிலேயே கடைந்து எடுத்த ஈனப் பிறவி யார் என்றால், அது சவுக்கு சங்கர்தான்.

திமுகவை வசை பாட அதிமுகவினர் பணம் கொடுக்கிறார்கள். ஓபிஎஸ்ஸை திட்டவும் அதிமுக தரப்பில் பணம் கொடுக்கப்படுகிறது. ஐபிஎஸ், ஐஏஎஸ் என ஒருவர் விடாமல் பணத்தை வாங்கிக் கொண்டு, மனசாட்சிக்கு விரோதமாக செயல்படுபவன் சவுக்கு சங்கர்.

அவன் அணிந்திருக்கிற உள்ளாடை முதல் நாள்தோறும் கொட்டிக் கொள்ளும் உணவு வரை, அனைத்துமே பிறர் போடும் பிச்சைதான். இப்படி கேடு கெட்ட வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கும் சவுக்கு சங்கர்,  ஊடகத்துறையை சேர்ந்தவர்களை தரம் தாழ்ந்து விமர்சனம் செய்வது என்பது கடும் கண்டனத்திற்குரியது.

மூத்த ஊடகவியலாளர் பார்த்திபன், நீண்ட அனுபவம் கொண்டவர். 13 ஆண்டுகளுக்கு முன்பே சன் தொலைக்காட்சியில் 40 ஆயிரம் ரூபாய்க்கு மேல் மாத ஊதியம் பெற்றவர். சன் நியூஸில் 30 நிமிட நேர செய்தியை, மிகவும் நேர்த்தியாக தயாரித்து வழங்கும் ஆற்றல் கொண்டிருந்தவர். செய்திகளை தயாரிப்பதுடன், செய்தியை வாசிப்பதிலும் தனித்த திறமை படைத்தவர்.

சன் டிவிக்கு பிறகு பாலிமர் டிவி, புதிய தலைமுறை டிவி என பயணம் மேற்கொண்டவர் பார்த்திபன். அங்கெல்லாம் ஒரு லட்சம் ரூபாயை தொட்டுவிடும் அளவுக்கு மாத ஊதியம் பெற்றவர். 13 ஆண்டு காலத்திற்கு மேலான ஊடக வாழ்க்கையில், பொருளாதார வசதியில் மேம்பட்டிருப்பவர்.

ஊடகத்துறையில் தனித்த திறமையால் தன்னை நிலை நிறுத்திக் கொண்டிருக்கும் பார்த்திபன், திராவிட சித்தாந்தத்தில் ஆழ்ந்த பற்று கொண்டிருப்பவர்.  அதன் காரணமாகவே, ஊடகத்துறையோடு தொடர்புடைய பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டுக் கொண்டிருப்பவர்.

Abp நாடு யூ டியூப் சேனலுக்கு ஊடகவியலாளர் பார்த்திபன் நேர்காணல் வழங்கியதை பொறுத்துக் கொள்ள முடியாத சவுக்கு சங்கர், எல்லா இடத்திலும் வாயை வைக்கும் நாயைப் போல, மூத்த ஊடகவியலாளர் பார்த்திபனையும் கேவலப்படுத்தும் விதமாக தனது டிவிட்டர் பக்கத்தில், 200 ரூப்பீஸ் கிளப்பில் புதிய நியமனம் என்று பதிவு ஒன்றை பகிர்ந்து உள்ளார்.

ஊடகத்துறையில் நியாயமான உழைப்பை செலுத்தி, அதன் மூலம் கிடைத்த வருவாயை, தீய செயல்களில் செலவழிக்காமல், தனிமனித கடமையுணர்வோடு குடும்பத்திற்காக செலவழித்து வருபவர். தாலி கட்டிய மனைவியை, பெற்ற குழந்தையை அடுத்த வேளை உணவுக்கு திண்டாட வைக்கும் அளவுக்கு கொடூர குணம் படைத்தவர் இல்லை ஊடகவியலாளர் பார்த்திபன். குடும்ப வாழ்விலும் பொது வாழ்விலும் யாரையும் ஏமாற்றி பிழைப்பு நடத்தும் அளவுக்கு தன்மானத்தை அடகு வைத்தவரும் இல்லை.  

சில்லறை காசுகளுக்காக யார் காலிலும் விழுந்து கிடக்கும் குணம் படைத்தவரும் இல்லை. ஊடகவியலாளர் என்ற அடையாளத்தை சுமந்து கொண்டு, மிரட்டி பிழைக்கும் தந்திரத்தையும் துளியளவும் அறியாதவர் மூத்த ஊடகவியலாளர் பார்த்திபன்.

அவரைப் போலவே, தமிழகத்தில் அச்சு மற்றும் காட்சி ஊடகங்களில் எட்டு மணிநேரத்திற்கு மேல் கடினமான உழைப்பை செலுத்திக் கொண்டிருக்கும் ஆயிரக்கணக்கான ஊடகவியலாளர்கள், தாங்கள் பணிபுரியும் நிறுவனம் வழங்கும் மாத ஊதியத்தை தவிர வேறு எந்த வழியிலும் கை நீட்டி பணம் பெறும் அளவுக்கு அற்ப குணம் படைத்தவர்களாக தங்களை ஒருபோதும் அழைப்பதை, அடையாளப்படுத்துவதை கண்டு அறச்சீற்றம் கொள்பவர்களாகவே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

தன்னைப் போலவே எல்லோரும் தரம் கெட்ட வாழ்க்கையை வாழ்வார்கள் என்ற கீழ்த்தரமான சிந்தனையோடு, அனைவரின் மீதும் சேற்றை வாரி பூசும் கீழ்த்தரமான செயல்களை தொடர்ந்து செய்து கொண்டிருக்கும் சவுக்கு சங்கருக்கு சரியான பாடம் புகட்ட, ஊடகவியலாளர்கள் அனைவரும் ஒன்று திரளும் காலம் நெருங்கிவிட்டது.  

அதிமுக பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமியை பற்றி கடந்த காலங்களில் கடுமையாக விமர்சனம் செய்த சவுக்கு சங்கர், இன்றைக்கு அவரை கொண்டாடுவதற்கான காரணத்தை வெளிப்படையாக சொல்லும் தைரியம் இருக்கிறதா..