ஊடகவியலாளர் என்ற பெயரில் மாமா பிசினஸை வெற்றிகரமாக நடத்திக் கொண்டிருக்கிறார் சவுக்கு சங்கர்.. ஊடகவியலாளர் என்று தன்னை அடையாளப்படுத்திக் கொள்வதை, ஊடகத்துறையை வாழ்க்கையாக கொண்டிருக்கும் செய்தியாளர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் வெட்கி தலை குணிந்து வருகிறார்கள்.
ஆனால், சவுக்கு சங்கரின் அடாவடியால் தங்கள் முகமூடிகள் கிழிந்து தொங்கிவிடுமோ என்ற அச்சத்தில், சவுக்கு சங்கருக்கு நேரடியாக ஆதரவு தராமல் மறைமுகமாக ஆதரவு தரும் கூட்டத்தில், முதன்மையாக இருப்பவர்கள் பிரபல தொலைக்காட்சிகளின் செய்தி ஆசிரியர்கள்தான் என்று கூறுவதை ஜீரணிக்கவே முடியவில்லை.
சவுக்கு சங்கருக்கு செய்திகள் தருபவர்கள் யார், யார்..?
சங்கர், தொடர்ச்சியாக யார் மீதெல்லாம் அவதூறு கிளப்புகிறான் என்பதை எல்லாம் உன்னிப்பாக கவனித்தால், எவ்வளவு பெரிய கிரிமனல் சவுக்கு சங்கர் என்பது வெட்ட வெளிச்சமாகிவிடும்.
ஆளும்கட்சியான திமுகவோ.. பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவோ. போட்டி மனப்பான்மையில் உள்ள தலைவர்கள்தான், சவுக்கு சங்கருக்க தீனி போட்டு வளர்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
அரசியலில் மட்டுமின்றி ஆட்சி நிர்வாகத்தில் இருக்கும் ஐஏஎஸ் உயர் அதிகாரிகள், காவல்துறையில் உள்ள ஐபிஎஸ் அதிகாரிகள் போன்றவர்களும் கூட தங்களுடன் பணியாற்றும் சக அதிகாரிகள் யாராவது பதவி உயர்விற்கு, செல்வாக்கு மிகுந்த இடத்திற்கு போட்டியாக இருக்கிறார்களோ.. அந்த அதிகாரிகளைப் பற்றி தரக்குறைவாக விமர்சனம் செய்வதற்கு சவுக்கு சங்கரை தான் பயன்படுத்தி வருகிறார்கள்.
இப்படிபட்ட கீழ்தரமான வேலைகளைகளை எல்லாம் தொழில்முறை ஊடகவியலாளர்கள் ஒருபோதும் செய்ய துணிய மாட்டார்கள். போட்டியாக இருப்பவர்களை பற்றி அவதூறாக பேச சொல்பவர்களின் பின்னணியை முதலில் பார்ப்பார்கள். எந்த நோக்கத்திற்காக அவதூறு செய்ய சொல்கிறார்கள் என்பதை எல்லாம் ஊடகவியலாளர்கள் அலசி ஆராய்ந்து பார்ப்பார்கள். பிறருக்கு கூலி வேலை பார்ப்பதற்கு ஒருபோதும் துணிய மாட்டார்கள்.
ஆளும்கட்சிக்கு எதிராகவோ, எதிர்க்கட்சியான அதிமுகவுக்கு எதிராகவோ சவுக்கு சங்கர் உண்மையான நோக்கத்தில் குற்றச்சாட்டுகளை வைத்தால் கூட அதன் பின்னணியில் பொருளாதார ரீதியான ஆதாயம் கிடைத்திருக்கிறது என்பதை ஊடகத்துறையில் உள்ள அனைவருமே தெரிந்து வைத்திருக்கிறார்கள்.
ஊடகத்துறையின் எய்ட்ஸாக மாறி நிற்கும் சவுக்கு சங்கரைப் பற்றி பேசுவதற்கே வெட்கப்படும் ஊடகவியலாளர்கள் எண்ணற்றவர்கள் இருக்கிறார்கள் என்கிற போது, சவுக்கு சங்கரை கொண்டாடுவதற்கு ஆர்வம் காட்டும் ஊடகவியலாளர்களின் தரத்தை எப்படி மதிப்பிடுவது என்பதுதான் இதுவரை புரியாத புதிராக இருந்தது.
ஆனால், இன்றைக்கு உண்மையான எதிர்க்கட்சியாக செயல்படுபவர் என்று பாராட்டு தெரிவித்திருக்கிறார், மூத்த ஊடகவியலாளர் ஆர்.கே. என்று சொல்லி கொள்கிற ராதாகிருஷ்ணன்.
பாரம்பரியமிக்க ஆங்கில ஊடகமான ஹிந்துவில் பல வருடங்கள் பணியாற்றியவர். தற்போது, அந்த நிறுவனத்தின் மற்றொரு பதிப்பான பிரண்ட் லைன் இதழில் பணியாற்றிக் கொண்டிருப்பவர்.
எந்தவொரு ஊடகத்திலும் பணியாற்றும் ஒட்டுமொத்த பணியாளர்களிடமும் பாராட்டுகளை பெறுவது என்பது, எவ்வளவு நல்லவராக இருந்தாலும் சாத்தியமாக இருக்காது. பலர் பாராட்டினால் சிலர் குறை கூறுவார்கள். சிலர் பாராட்டினால் பலர் குறை கூறுவார்கள். ஆனால், ஒட்டுமொத்த பணியாளர்களுமே ஒருவரை புறக்கணிக்கிறார்கள்.. என்றால் அந்த நபரிடம் திறமை இல்லை என்பது மட்டுமே காரணமாக இருக்காது. அவரின் குணநலன்கள் மட்டுமே முக்கிய காரணமாக இருக்கும்.
அந்த வகையில் பாரம்பரியமிக்க ஹிந்து நிறுவனத்தில் பணியாற்றியவர்கள், பணியாற்றிக் கொண்டிருப்பவர்களில் 90 சதவீதத்திற்கு மேற்பட்டவர்களால் சகித்து கொள்ள முடியாத நபராக இருப்பவர்தான் ராதாகிருஷ்ணன்.
இவரின் உண்மையான குணத்தை பற்றி அறிந்து கொள்ள நிறைய நிகழ்வுகளை சுட்டிக்காட்டலாம் என்றாலும் கூட ஒன்றிரண்டு நிகழ்வுகளை மட்டுமே நினைவு கூர்கிறோம்.
2008 ஆம் ஆண்டில் திமுக ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருந்த போது, அப்போதைய முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி செய்தியாளர்களை சந்திக்க சிறப்பு ஏற்பாடு ஒன்று செய்திருந்தார்.
சென்னை அண்ணாசாலையில் உள்ள பிரபலமான தனியார் ஹோட்டலில் பத்திரிகையாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருந்தார். வரவேற்பு பகுதியில், அப்போதைய அமைச்சர் ஆற்காடு வீராசாமி, சேரில் அமர்ந்து பத்திரிகையாளர்களை வரவேற்றுக் கொண்டிருந்தார்.
பாரம்பரிய நிறுவனமான ஹிண்டு ஆங்கில நாளிதழின் செய்தியாளர் என்ற எண்ணத்தை சுத்தமாக துடைத்து எறிந்துவிட்டு அமைச்சரின் எடுபிடியாக இருந்தவர்தான் இந்த ராதாகிருஷ்ணன்.
ஹோட்டலுக்கு வந்த சிறிய நிறுவனங்களில் பணியாற்றும் பத்திரிகையாளர்கள் கூட நேராக அவர்களுக்கு என போடப்பட்டிருந்த இருக்கையில் சென்று அமர்ந்து கொண்டார்கள்.
ஆனால், ராதாகிருஷ்ணன், அங்கு வந்த அமைச்சர்களுக்கு இருக்கைகளை எடுத்து போடும் அளவிற்கு தரம் தாழ்ந்து நடந்து கொண்டார்.
அதைவிட கொடுமையாக, கனிமொழி கருணாநிதி வந்த போது இருக்கையை எடுத்து போட்ட ராதாகிருஷ்ணன், கனிமொழியின் உதவியாளரே செய்ய தயங்கும் பணிவிடைகளை செய்ததுதான், ஒட்டுமொத்த ஊடகவியலாளர்களையும் முகம் சுழிக்க வைத்தது.
மூத்த அரசியல் தலைவர்கள் வரும்போதெல்லாம் அவர்களை வரவேற்று கனிமொழி அழைத்து சென்று அமர வைத்த போது அவரை பின் தொடர்ந்து இருக்களை எடுத்து போடும் படுகேவலமான செயல்களை செய்தவர்தான் இந்த ராதாகிருஷ்ணன்.
ஊடகவியலாளருக்கு உரிய மரியாதையை அரசியல்வாதிகளின் காலில் சமர்ப்பித்துவிட்டு, திமுக தொண்டர்களை விட கேவலமாக நடந்து கொண்ட ராதாகிருஷணனின் அசிங்கமான செயல்களை, அந்த காலத்திலேயே ஜுனியர் விகடனில் செய்தியாக வெளியிட்டவர் பர்க்கத் அலி.
ஊடகவியலாளர் என்ற சொல்லி கொள்வதற்கே தகுதியில்லாதவர் ராதாகிருஷ்ணன் என்பதற்கு மற்றொரு நிகழ்வையும் சுட்டி காட்டுகிறோம்.
2009 ஆம் ஆண்டில் ஈழத்தில் நடைபெற்ற இறுதிகட்ட போரில், பல்லாயிரக்கணக்கான விடுதலைப் புலிகள் மட்டுமல்ல லட்சக்கணக்கான அப்பாவி மக்களையும் இலங்கை ராணுவம் ஈவு இரக்கமின்றி கொன்றது. இன அழிப்பை முழுமையாக செய்தது. அந்த காலகட்டத்தில் தமிழ்நாட்டில் அரசியலுக்கு அப்பாற்பட்டு அனைத்து தரப்பு மக்களிடமும் கொந்தளிப்பான மனநிலை நிலவிக் கொண்டிருந்தது.
தமிழ் உணர்வாளர்களிடம் காணப்பட்ட அதிகமான கோபம், சென்னையில் பணியாற்றிய ஊடகவியலாளர்களையும் பற்றிக் கொண்டது. இலங்கை அரசாங்கத்திற்கு எதிராகவும், அப்போது மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸுக்கு எதிராகவும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து செய்திகளை தொடர்ந்து வெளியிட்டு வந்தார்கள்.
இலங்கை அரசுக்கு எதிராக தமிழ், ஆங்கிலத்தில் வெளியான கட்டுரைகள், உலகம் முழுவதும் பரவி, ராஜபக்ஷே தலைமையிலான ஆட்சிக்கு சர்வதேச அளவில் கடும் நெருக்கடியை ஏற்படுத்தியது.
போர் குற்றங்களில் இருந்து தப்பித்துக் கொள்வதற்காக ராஜபக்ஷே அரசு பல்வேறு சதி செயல்களில் ஈடுபட்டது.
தமிழ்நாட்டில் இலங்கை அரசுக்கு எதிராக நிலவும் கொந்தளிப்பை தணிக்க, முதற்கட்டமாக, சென்னையில் பத்திரிகையாளர்களை சரிகட்டும் முயற்சியில் ஈடபட்டார்கள். சென்னை எலும்பூரில் உள்ள இலங்கை தூதரகத்திற்கு பணிமாறுதல் பெற்ற வந்த தூதர், ராதாகிருஷ்ணன் போன்ற ஊடகவியலாளர்களை தான் முதன்முதலில் குறி வைத்து வளைத்தது.
அன்றைய தேதியில் சென்னையில் பிரபல பத்திரிகையாளர்களாக நடமாடிய பலருக்கு, நட்சத்திர ஹோட்டல்களில் மது விருந்தும், தங்க நாணயங்களையும் வழங்கி, குஷிபடுத்தியது. சென்னை பத்திரிகையாளர்களை ஒருங்கிணைக்கும் பணியில் முழுமையாக ஈடுபட்டவர் ராதாகிருஷ்ணன் என்று பேச்சு எழுந்து, தமிழ் இணத்தை காட்டி கொடுக்கும் துரோகத்தை பணத்திற்காக துணிந்து செய்த ராதாகிருஷ்ணனின் கீழ்தரமான செயல்பாடுகளை பார்த்து, கொதித்து எழுந்தார்கள் நேர்மையான பத்திரிகையாளர்கள் என்று இன்றைக்கும் நினைவு கூறுபவர்கள் சென்னையிலேயே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
ஊடக அறத்திற்கு அப்பாற்பட்டு எந்தவொரு செயலலையும் துணிந்து செய்யக் கூடியவர் ராதாகிருஷ்ணன் என்பது ஹிந்து நிறுவனத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கும் அனைவருக்குமே தெரிந்த ஒன்றுதான்.
2006 முதல் 2011 வரை திமுக ஆட்சியில் இருந்த போது, சென்னை சங்கமம் என்ற கலை விழாவை முன்னெடுத்தார் கனிமொழி. கிராமிய கலைஞர்களை ஒருங்கிணைக்கும் பணியை அப்போது ஏற்றிருந்தவர் ஜெகத் கஸ்பர் என்ற பாதிரியார். சர்வதேச அளவில் மர்மமான செயல்பாடுகளில் ஈடுபடுபவர் கஸ்பர் என்ற பேச்சும் அப்போதே எழுந்திருந்தது.
அப்படிபட்ட கஸ்பரின் ஆத்மார்த்தமான நண்பர்தான் ராதாகிருஷ்ணன். சென்னை மெரினா கடற்கரையில் காலை நேரத்தில் கஸ்பருடன் நடைபயிற்சி செல்வதை வழக்கமாக கொண்டிருந்தவர் ராதாகிருஷ்ணன்.
ராதாகிருஷ்ணன், கஸ்பர் இடையேயான உறவு, பல மர்மங்களை கொண்டிருப்பவைதான் என்று இன்றைக்கும் அதிர்ச்சியோடு கூறுபவர்கள் பலர் இருக்கிறார்கள்.
திமுகவில் உள்ள அறிஞர்களை விட, தாங்கள் தான் அறிவு ஜீவிகள் என்ற நினைப்புடனேயே சுற்றிக் கொண்டிருந்தவர்கள். கனிமொழியின் பரிந்துரையால் அப்போதைய முதல்வர் கலைஞர் மு.கருணாநிதியும் கஸ்பருடனும் ராதாகிருஷ்ணனுடனும் நெருக்கம் காட்டி வந்தார்.
அன்றைய காலத்தில் திமுகவில் கிடைத்த மரியாதையும், செல்வாக்கும் இன்றைய தேதியில் திமுகவுக்கும் ஆட்சிக்கும் தலைமை பொறுப்பை ஏற்ற மு.க.ஸ்டாலினிடம் கிடைக்க வில்லை.
கலைஞர் மு. கருணாநிதி உயிரோடு இருந்த காலத்தில் அண்ணா அறிவாலயத்திலேயே குடியிருந்த ராதாகிருஷ்ணன், இன்றைய தேதியில் வாட்ச் மேன் கூட அவரை மதிப்பதில்லை.
கலைஞருக்கே அறிவுரை கூறியவன் என்று பீற்றிக் கொண்டு திரிந்த ராதாகிருஷ்ணனை, அண்ணா அறிவாலயத்திற்குள்ளே கால் வைக்க முடியாத அளவுக்கு செய்துவிட்டார் இன்றைய முதல்வர் மு.க.ஸ்டாலின்.
மு.க.ஸ்டாலின் மீதான தனிப்பட்ட கோபத்தை அடிக்கடி வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார் ராதாகிருஷ்ணன். அவர் சாதாரண ஆளாக இருந்தால், மு.க.ஸ்டாலினின் விசுவாசிகள் என்றைக்கோ தட்டி தூக்கியிருப்பார்கள்.
ஆனால், ஊடகவியலாளர் என்ற அடையாளத்தை சுமத்திருப்பதால், நரி வலம் போனால் என்ன.. இடம் போனால் என்ன என்ற வகையில் கண்டு கொள்ளாமல் விட்டு விட்டார்கள்.
ராதாகிருஷ்ணனின் பேச்சை, அவரை பற்றி முழுமையாக தெரிந்து வைத்திருக்கும் ஊடகவியாளர்கள் ஒருவர் கூட மதிப்பதில்லை. தொலைக்காட்சிகளில் விவாதம் என்ற நிகழ்ச்சி வந்த பிறகுதான், ராதாகிருஷ்ணனின் முகத்தை பார்க்க வேண்டிய கொடுமை எல்லாம் தமிழ்நாட்டு மக்களுக்கு நேரிட்டிருக்கிறது.
கிரிமினல்களுக்கு இருக்கிற அத்தனை குணங்களும் ராதாகிருஷ்ணனுக்கும் உண்டு என்று அவருடன் பல ஆண்டுகள் பழகிய ஊடகவியலாளர்களே மனம் நொந்து பேசிய தருணங்கள் நிறைய உண்டு.
இப்படிபட்டவர்தான், சவுக்கு சங்கரை தூக்கி வைத்து கொண்டாடிக் கொண்டிருக்கிறார். ராதாகிருஷ்ணன் பேட்டியை எல்லாம் வெளியிட்டு புதிய தலைமுறை டிவி தனக்கு இருந்து வரும் மதிப்பை குட்டிச் சுவராக்கி கொண்டு வருகிறது.
இன்றைக்கு சவுக்கு சங்கரை கொண்டாடுகிற ராதாகிருஷ்ணன், மூன்று ஆண்டுகளுக்கு முன்பு வரை சவுக்கு சங்கரின் குருவாக வாழ்ந்த நக்கீரன் முன்னாள் செய்தியாளர் அன்பழகனை பற்றி எப்படியெல்லாம் கடுமையான விமர்சனங்களை வைத்தார் என்று பார்த்தால் அதிர்ச்சியாக தான் இருக்கும்.
பிளாக் மெயில் பத்திரிகையாளர் என்று நா கூசாமல் திட்டி தீர்த்தார்கள். அன்பழகன் மரணமடைவதற்கு முன்பு வரை, அதிமுக ஆட்சியாளர்களுக்கு எதிராக கடும் குற்றச்சாட்டுகளை முன் வைத்து வந்தார்.
தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் பல ஆவணங்களை பெற்று, அதன் அடிப்படையில் எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட முந்தைய அதிமுக ஆட்சியில் அமைச்சர்களாக பதவி வகித்தவர்களை தூக்க விடாமல் செய்தார்.
அதேபோல, ஐஏஎஸ் உயரதிகாரிகள் பலரையும் கடுமையாக விமர்சனம் செய்தார். முறைகேடாக நடந்து கொண்டவர்களை பட்டியலிட்டு பிளக்ஸ் பேனர் வைத்து ஐஏஎஸ் அதிகாரிகளை அசிங்கப்படுத்தியவரும் அன்பழகன்தான்.
பொது வாழ்க்கையில் ஈடுபடுபவர்கள் ஜனநாயகத்திற்கு எதிராக செயல்படும் போது அவர்களை கண்டிக்க வேண்டும் என்ற பாடத்தையே அன்பழகனிடம் இருந்துதான் கற்றுக் கொண்டார் சவுக்கு சங்கர்.
சவுக்கு சங்கரை போல கண்ட இடத்தில் எல்லாம் வாயை வைக்காதவர் அன்பழகன். நகராட்சி துறை, செய்தி துறை என்று குறிப்பிட்ட சில துறைகளில் நடைபெறும் முறைகேடுகளை மட்டுமே அம்பலப்படுத்தியவர் அன்பழகன்.
அவரால் அடையாளப்படுத்தப்பட்டவர்கள், தங்களின் சட்டவிரோதமான செயல்கள் முழுமையாக அம்பலப்பட்டு போய்விட்டு விடக் கூடாது என்ற பயத்தில் அன்பழகனிடம் சரணடைந்து, சமரசம் பேசி, அதற்கு பிரதிபலனாக கப்பம் கட்டியதாகவும் தகவலும் பரப்பப்பட்டது.
பத்திரிகையாளராக பணியை தொடங்கிய அன்பழகன், ஊழல்வாதிகளை அம்பலப்படுத்துவதற்காக மக்கள் செய்தி மையத்தை தொடங்கி, ஆட்சியாளர்களின் தூக்கத்தை கெடுத்தார்
முந்தைய அதிமுக ஆட்சியில் அன்பழகனால் கடுமையாக பாதிக்கப்பட்டவர் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிதான்.
தனது அரசியல் வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அன்பழகன் செயல்பட்டதால், அவரை மிரட்டும் வகையில் ஜனநாயக மரபுகளுக்கு எதிராக போலீசாரை தூண்டிவிட்டு கைது செய்து கோவை சிறையில் அடைத்தார் எஸ்.பி.வேலுமணி.
சிறை வாழ்க்கைதான் அன்பழகனின் ஆயுளை முடித்தது. அன்பழகன் மரணமடைந்ததற்கு எஸ்.பி.வேலுமணியின் அதிகார திமிர்தான் முக்கிய காரணம்.
ஒரு ஊடகவியலாளரின் வாழ்க்கையை காவு வாங்கிய எஸ்.பி.வேலுமணிதான், இன்றைக்கு சவுக்கு சங்கருக்கு பணத்தை வாரி வழங்கி, திமுக ஆட்சிக்கு எதிராகவும், அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராகவும் அவதூறுகளை பரப்ப கொம்பு சீவி விட்டுக் கொண்டிருக்கிறார்.
தனிமனித வாழ்வில் மட்டுமல்ல பொது வாழ்விலும் துளியளவும் ஒழுக்கம் இல்லாத சவுக்கு சங்கரை பாராட்டுகிறார் ராதாகிருஷ்ணன் என்றால்,
ஜுனியர் பிராடை சீனியர் பிராடு பாராட்டுவதாகதான் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று அறச்சீற்றம் காட்டுகிறார்கள் மூத்த ஊடகவியலாளர்கள்.
சவுக்கு சங்கருக்கு எதிராக ஒரு வார்த்தை சொன்னால் கூட போதும் ராதாகிருஷ்ணனின் ஜாதகத்தையே புட்டு புட்டு வைத்துவிடுவார். தன்னுடைய ஒட்டுமொத்த வாழ்க்கையும் நாறி போய்விடும் என்பதால்தான் சவுக்கு சங்கரின் காலடியில் விழுந்து கிடக்கிறார் ராதாகிருஷ்ணன்.
ராதாகிருஷ்ணன் போன்ற கபடதாரிகளே சவுக்கு சங்கரை தலையில் தூக்கி வைத்து கொண்டாடும் போது, சாதாரண மக்கள் சவுக்கு சங்கர் பெயரை உச்சரிப்பது பற்றி எப்படி குற்றமாக எடுத்துக் கொள்ள முடியும்.
சவுக்கு சங்கரின் அறமற்ற செயல்களால், நேர்மையான, நடுநிலையான ஊடகவியலாளர்கள் பொது வெளியில் தங்களை முன்னிலை படுத்தி கொள்ள முடியாத துயரத்தை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள்.
ராதாகிருஷ்ணனின் சுயரூபத்தை அம்பலப்படுத்தியதைப் போல, சவுக்கு சங்கருக்கு ரகசியமாக உதவிக் கொண்டிருப்போரையும் துணிந்து அம்பலப்படுத்தும் துணிச்சல் அனுபவம் மிகுந்த ஊடகவியலாளர்களுக்கு வந்துவிட்டால், சவுக்கு சங்கர் அட்ரஸ் இல்லாமல் போகும் காலம் வெகு தூரத்தில் இல்லை.
ஆளும்கட்சியாக உள்ள திமுகவிற்கும் ஆட்சிக்கும் தலைமை வகித்துக் கொண்டிருக்கும் மு.க.ஸ்டாலின் இடத்தில் கனிமொழி அமர வேண்டும் என்பதுதான் சவுக்கு சங்கர், ராதாகிருஷ்ணன் போன்றோரின் கனவு. கனிமொழியை தங்கள் இஷ்டத்திற்கு செயல்பட வைத்துவிட முடியும் என்பதால், மு.க.ஸ்டாலின் மீது அவதூறு சேற்றை வாரி இறைக்கிறார்கள் சவுக்கு சங்கரும், ராதாகிருஷ்ணனும். இவர்களின் கபட நாடகம் ஒருபோதும் திமுக தொண்டர்களிடம் எடுபடாது என்பதுதான் நிதர்சனம்.
https://youtu.be/EuWDFZ-ZTVQ