Sun. Jul 3rd, 2022

தாரை இளமதி, சிறப்புச் செய்தியாளர்.

 ஐஏஎஸ் உயரதிகாரிகள் பணியிட மாற்றம்  வழக்கம் போலவே விமர்சனங்களுக்கு ஆளாகியுள்ளது. மக்கள் நல்வாழ்வுத்துறையின் முதன்மைச் செயலாளரான டாக்டர் ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ்ஸின் பணியிட மாற்றம் ஊடகவியலாளர்கள் மற்றும் பொதுமக்களிடம் விவாதப் பொருளாக மாறியுள்ளது.

உணவு மற்றும் கூட்டுறவுத்துறைக்கு தானே மாற்றப்பட்டுள்ளார். அந்த இரண்டு துறையும் கூட நேரடியாக மக்களுடன் தொடர்புடைய துறைகள் தானே. அந்த இரண்டு துறைகளிலும் அதிரடி மாற்றங்களைக் கொண்டு வந்து மக்களுக்கு பயனளிக்கும் அதிகமான சேவைகளை வழங்கி,அதன் மூலம் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சிக்கு நல்ல பெயரை உருவாக்கி தரும் மிகப்பெரிய பொறுப்புதானே டாக்டர் ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ்ஸுக்கு வழங்கப்பட்டிருக்கிறது என்று உற்சாகமாக பதில் அளிப்பவர்களும் ஊடகத்துறையிலேயே பலர் உள்ளனர்.

ஆனால், டாக்டர் ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ், இந்த பணியிட மாற்றத்தை சந்தோஷமாக ஏற்றுக் கொண்டிருப்பாரா? சந்தேகம்தான் என்கிறார்கள் அவரின் மனதுக்கு நெருக்கமான மூத்த ஊடகவியலாளர்கள்.

உள்ளே அழுகிறேன். வெளியே சிரிக்கிறேன் என்ற நிலைதான் டாக்டர் ராதாகிருஷ்ணனுக்கு என்கிறார்கள். கடந்த 15 நாட்களுக்கு முன்பாகவே ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் குறித்து தலைமைச் செயலகத்தில் பரவலாகவே தகவல் பரிமாற்றம் நடந்தது.

அப்போதே, மக்கள் நல்வாழ்வுத்துறையில் இருந்து டாக்டர் ராதாகிருஷ்ணன் மாற்றப்படவுள்ளார் என்றும் அவர் உள்துறைச் செயலாளராக பணியாற்ற விரும்புகிறார். அதுதொடர்பான விருப்பத்தையும் அவருக்கு மிக நெருக்கமான ஐஏஎஸ் உயரதிகாரிகளிடம் விவாததித்து இருக்கிறார் என்றும் கூறப்பட்டது.  

2000 ஆம் ஆண்டில் இருந்து டாக்டர் ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ்ஸுடன் நேரடி பழக்கம் என்பதால், உள்துறை செயலாளர் பணியிடத்தை விரும்புகிறீர்களா? என்று கைபேசி வாயிலாக கேள்வி எழுப்பினேன். வழக்கமாக எதற்கும் கோபப்படாத அவர், என்ன இளமதி, ஏதோ ஆம்புலன்ஸ் உதவி, மருத்துவமனையில் அட்மிஷன் உதவி என்று கேட்பீர்கள் என்று பார்த்தால், டிரான்ஸ்பர் பற்றி எல்லாம் கேள்வி கேட்கிறீர்கள் என்று கொஞ்சமாக கோபப்பட்டார்.

சார், தலைமைச் செயலகத்தில் இப்படியொரு பேச்சு உலவிக் கொண்டிருக்கிறது. அதனால்தான் உங்களிடமே கேட்டு தெளிவுப்படுத்திக் கொள்ளலாமே என்று கேட்டேன் என்றேன். உடனே சாந்தமான அவர், எந்த துறை என்பதை நான் எப்படி முடிவு செய்ய முடியும்?, இந்த துறையை கொடுங்கள் என்று என்னால் கேட்க முடியுமா?.. டிரான்ஸ்பர் தொடர்பான முடிவு எடுப்பவர்கள் மேலிடத்தில் உள்ளவர்கள். எந்த துறையை கொடுத்தாலும் அங்கு சென்று பணியாற்ற வேண்டியதுதான் எங்கள் கடமை என்று கூறி இணைப்பைத் துண்டித்தார்.

அன்று அவர் அளித்த பதிலில் விரக்தி காணப்பட்டது என்று கூறிவிடலாம். ஆனால், அன்றே உள்துறை தனக்கு வழங்க மாட்டார்கள் என்று அவர் முடிவுக்கு வந்துவிட்டார் என்பதை அவரது பதில் மூலம் உணர்ந்து கொள்ள முடிந்தது.

டாக்டர் ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ் அளித்த விளக்கத்தையடுத்து, சீனியர் ஐஏஎஸ் அதிகாரிகள் ஒன்றிரண்டு பேரிடம் பேசினேன். அவர்கள் கூறிய கருத்துகள் அதிர்ச்சியளிக்கும் விதமாக இருந்தது.

முதல் அமைச்சரின் செயலாளர்களில் முதன்மையானவருக்கு அடுத்த இடத்தில் 2 வது செயலாளராக இருக்கும் உமாநாத் ஐஏஎஸ்ஸுக்கும் டாக்டர் ராதாகிருஷ்ணனுக்கும் ஏழாம் பொருத்தம் என்றும் அதனால், டாக்டர் ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ்ஸுக்கு எந்தவொரு முக்கியத்துவம் கிடைப்பதையும் அவர் விரும்ப மாட்டார் என்றும் கூறினார்கள் அவர்கள்.

அதற்கு அண்மைகாலத்தில் நடைபெற்ற ஒரு மோதலையும் விவரித்தனர்.

அண்மையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில்  தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற மாவட்ட ஆட்சியர்கள் மாநாட்டில் கொரோனா தொற்று மேலும் அதிகரிக்காமல் முழுமையாக கட்டுப்படுத்துவது தொடர்பான கருத்து பரிமாற்றம் நடைபெற்றுள்ளது. அப்போது பேசிய டாக்டர் ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ் தடுப்பூசி முகாம் நடத்துதல் உள்ளிட்ட பல்வேறு கருத்துகளை முன்வைத்துள்ளார். ஆனால் அவருக்குப் பிறகு பேசிய டாக்டர் உமாநாத் ஐஏஎஸ், அவரை உதாசீனப்படுத்தும் வகையில் டாக்டர் ராதாகிருஷ்ணன் முன்வைத்த பல கருத்துகள் நடைமுறையில் வெற்றி பெறவில்லை என்று கூறியதுடன் பல்வேறு ஆலோசனைகளையும் கூறியுள்ளார் முதல்வர் பங்கேற்ற ஆட்சியர்கள் மாநாட்டில் தன்னை அவமானப்படுத்தும் வகையில் டாக்டர் உமாநாத் ஐஏஎஸ் பேசியதாக உணர்ந்து, மனம் வெறுத்துப் போயிருக்கிறார் டாக்டர் ராதாகிருஷ்ணன். ஆட்சியர்கள் மாநாடு முடிந்தவுடன் உமாநாத் ஐஏஎஸ்ஸிடம் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார், டாக்டர் ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ்.

துறைச் செயலாளரான நான் ஆலோசனைகளாக பல கருத்துகளை முதல்வரிடம் தெரிவிக்கிறேன். அதேபோல, உங்களுக்கும் ஐடியாக்கள் இருந்தால் முதல்வரிடம் கூறுவதில் தவறில்லை. ஆனால் நான் கூறிய ஆலோசனைகள் பயனளிக்காது என்று கூறி புறம் தள்ளுவது சீனியரான என்னை அவமானப்படுத்தும் செயல் என்று கொஞ்சம் சீற்றத்துடனேயே டாக்டர் ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ், தனது அதிருப்தியை வெளிப்படுத்தியதாகவும் கூறுகிறார்கள் சுகாதாரத்துறை உயர் அலுவலர்கள்.

டாக்டர் உமாநாத் ஐஏஎஸ்….

இந்த ஒரு விஷயம்தானா, உமாநாத் ஐஏஎஸ்ஸுக்கும் டாக்டர் ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ்ஸுக்கும் இடையேயான மோதலுக்கு காரணம் என்று கேட்டால் இல்லை என்றுதான் கூறுகிறார்கள் தலைமைச் செயலகத்தில் உள்ள மூத்த அதிகாரிகள்.

திமுக ஆட்சிக்கு வந்தவுடனேயே சுகாதாரத்துறையில் இருந்து உடனடியாக மாற்ற வேண்டும் என்று முதல் அமைச்சரின் செயலாளர்கள் துடித்தனர். ஆனால், அப்போதைய நிலைமையில், கொரோனா இரண்டாம் அலை உச்சத்தில் இருந்ததாலும், சென்னை உயர்நீதிமன்றம் டாக்டர் ராதாகிருஷ்ணனின் பணிக்கு பாராட்டு தெரிவித்திருந்ததாலும் அவரை பணியிட மாற்றம் செய்யும் எண்ணத்தை தள்ளி வைத்தனர்.

ஆனால், சுகாதாரத்துறையில் டாக்டர் ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ் சுதந்திரமாக செயல்பட்டு விடக் கூடாது என்பதற்காக, டாக்டர் பி செந்தில் குமார் ஐஏஎஸ்ஸை சுகாதாரத்துறையின் சிறப்பு அதிகாரியாக நியமித்து முட்டுக்கட்டை போடப்பட்டது என்றும் கூறுகிறார்கள்.

மேலும், சுகாதாரத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இதர துறைகளின் இயக்குனர்களும் கூட, டாக்டர் ராதாகிருஷ்ணனின் உத்தரவுகளுக்கு கட்டுப்படாமல், முதல் அமைச்சரின் செயலகத்தில் இருந்து வந்த உத்தரவுகளை மட்டுமே செயல்படுத்தி வந்தார்கள் என்ற தகலும் உண்டு.

இப்படியாக, கடந்த ஓராண்டாகவே சுகாதாரத்துறையில் டாக்டர் ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ் நீடிப்பதை முதல் அமைச்சரின் செயலாளர்கள் விரும்பியதே இல்லை என்கிறார்கள்.

முதல்வருக்கு நெருக்கமானவர்கள் தன்னை எப்படியாவது மாற்றிவிடுவார்கள் என்பதை கடந்த ஆண்டு முதலே உணர்ந்திருந்த டாக்டர் ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ், தனது உழைப்புக்கு ஏற்ற வகையில் முக்கியத்துவம் வாய்ந்த துறைக்கு பணிமாறுதல் செய்ய வேண்டும் என்று எதிர்பார்த்தார். உள்துறையை அவர் விரும்பியதற்கு காரணம் என்று அவருக்கு நெருக்கமான அதிகாரிகள் சொல்லும் கருத்துகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவையாகதான் இருக்கிறது.

சேலம், நாகப்பட்டினம், தஞ்சாவூர் என மாவட்டங்களில் ஆட்சியராக பணியாற்றிய அனுபவம் உள்ளதாலும், பேரிடர் காலமான சுனாமி, கும்பகோணம் பள்ளி தீ விபத்து போன்ற  நேரங்களில் சிறப்பாக பணியாற்றி மக்களுக்கு மிகுந்த நம்பிக்கையளித்ததுடன் உலகையே மிரட்டிய கொரோனா உயிர்க்கொல்லி நோயை கட்டுப்படுத்துவதிலும், மேலும் பரவாமல் தடுப்பதிலும், கிராமங்கள் தோறும் சிறப்பு சிகிக்சை கிடைப்பதற்கான ஏற்பாடுகளை துரித கதியில் மேற்கொண்டதாலும், மாநிலம் முழுவதும் பிரபலமாகிவிட்டார் டாக்டர் ராதாகிருஷ்ணன்.

அதைவிட முக்கியமாக   தமிழரான டாக்டர் ராதாகிருஷ்ணன், தமிழர்களின் பண்பாடு, குணநலன்கள் அனைத்தையும் அறிந்தவர். மாநிலத்தின் எந்த மூலையில் இருந்து எந்த நேரத்தில் கைபேசியில் யார் அழைத்தாலும், அவர்களுக்கு தயங்காமல் பதில் அளிக்க கூடியவர், உதவி செய்யக் கூடியவர் என்பதெல்லாம் அவருக்குரிய சிறப்பு பண்புகள். இப்படிபட்ட சிறப்பு குணங்களால் உள்துறையில் தன்னால் அசாத்திய திறமையுடன் பணியாற்றிவிட முடியும் என்பது அவரது எண்ணமாக இருந்தது.

உள்துறைச் செயலாளர் பதவியை ராதாகிருஷ்ணன் எதிர்பார்க்கிறார் என்ற தகவலை அறிந்த மூத்த அமைச்சர் ஒருவர், அந்த பதவியில் அவரை அமர்த்தினால் அரசியல் ரீதியாகவும் திமுக ஆட்சிக்கு சில நன்மைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது என்ற கருத்தை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்றதாகவும் தகவல் கிடைத்தது.

ஆளுநராக உள்ள ஆர்.என்.ரவி, திமுக ஆட்சிக்கு குடைச்சல் கொடுப்பதையே அன்றாட பணியாக வைத்துள்ளார். இந்த நேரத்தில் உள்துறை செயலாளர் பதவியில் டாக்டர் ராதாகிருஷ்ணனை அமர்த்தினால் அவருக்கு உள்ள டெல்லி தொடர்புகள் மூலம் தமிழக அரசின் எண்ணங்களை மத்திய பாஜக அரசின் மேலிடத்திற்கு சத்தமில்லாமல் தெரிவித்துவிடலாம். அரசு பதவிக்கு உண்மையானவராக இருப்பவர் அவர் என்பதை செல்வி ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விவகாரத்திலேயே வெளிப்பட்டிருக்கிறது என்றெல்லாம் கூறியிருக்கிறார் அந்த மூத்த அமைச்சர். ஆனால், அவையெல்லாம் வெற்றிப் பெறவில்லை என்கிறார்கள்.

தற்போது அவருக்கு வழங்கப்பட்டுள்ள கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோ பாதுகாப்புத்துறையும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த துறைதானே. மக்களுக்கு நேரடியாக சேவை செய்யும் துறை என்பதால், இந்த துறைகளிலும் பல புதுமைகளை புகுத்தி, முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சிக்கு நல்ல பெயரை பெற்றுத் தர முடியும் என்று டாக்டர் ராதாகிருஷ்ணனுக்கு மகிழ்ச்சியளிக்கும் வகையில் கருத்துகள் கூறுபவர்களும் ஊடக உலகில் இருக்கிறார்கள்.

இரண்டு அமைச்சர்களின் தலைமையின் கீழ் டாக்டர் ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ் பணியாற்ற வேண்டும். கூட்டுறவுத்துறைக்கு அமைச்சர் ஐ.பெரியசாமி. ஆட்சி நிர்வாகத்தில் மிகுந்த அனுபவம் கொண்டவராக அவர் இருந்தாலும், அந்த துறையில் விருப்பம் இல்லாதவராக இருக்கிறார். அவரின் விரக்தியை போக்கி, அவரிடம் நல்ல பெயர் எடுப்பது டாக்டர் ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ்ஸுக்கு அல்வா சாப்பிடுவது மாதிரிதான். ஆனால், முதல்முறையாக உணவுத்துறை அமைச்சராக பதவியேற்று, பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்குவதிலேயே மக்களிடம் மிகுந்த அதிருப்தியை சம்பாதித்து வைத்திருக்கும் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணியின் விருப்பத்திற்கு ஏற்பவெல்லாம் பணியாற்ற வேண்டிய சூழலைதான் டாக்டர் ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ் எப்படி எதிர்கொள்ளப் போகிறார் என்று அச்சத்துடனேயே கேட்கிறார்கள் அவரது விசுவாசிகள்.

1,582 thoughts on “டாக்டர் ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ் விரும்பியது உள்துறை; உமாநாத் ஐஏஎஸ்ஸிடம் சீறியதால் பழிவாங்கப்பட்டாரா?…”
  1. электро штабелеры для склада
    [url=https://elektroshtabeler-kupit.ru]https://www.elektroshtabeler-kupit.ru/[/url]

  2. самоходные штабелеры
    [url=https://shtabeler-elektricheskiy-samokhodnyy.ru]https://shtabeler-elektricheskiy-samokhodnyy.ru[/url]