Sat. Nov 23rd, 2024

அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, அவரது சகோதரர் அன்பரசன், அவரது மனைவி மலதா உள்ளிட்ட 59 இடங்களில் இன்று அதிகாலை முதல் நடைபெற்ற லஞ்ச ஒழிப்பு போலீசாரின் சோதனை, இரவு 7 மணியளவில் நிறைவடைந்துள்து.

வருமானத்திற்கு அதிகமாக 58 கோடியே 24 லட்சம் ரூபாய் அளவுக்கான சொத்து குவிப்பு புகாரில், லஞ்ச ஒழிப்பு போலீசார் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து விசாரணை தொடர்ந்து மேற்கொண்டு வந்தனர்.

இதனையடுத்து, இன்று அதிகாலை கோவையில் உள்ள எஸ்.பி.வேலுமணி வீடு, அவரது சகோதரர் வீடு உள்ளிட்ட 59 இடங்களில் அதிரடியாக லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டனர்.

திருப்பூரில் உள்ள பிரபல தங்க நகை விற்பனை கடை, சேலத்தில் ஊரக வளர்ச்சித்துறை அதிகாரி உள்பட தமிழகத்திலும், கேரளாவில் உள்ள எஸ்.பி.வேலுமணிக்கு சொந்தமான பண்ணை வீடு உள்ளிட்ட 59 வீடுகளிலும் நடைபெற்ற சோதனை, இரவு 7 மணியளவில் நிறைவடைந்தது.

இதன் முடிவில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை தொடர்பாக அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளனர்.

அதில், எஸ்.பி.வேலுமணிக்கு தொடர்புடைய இடங்களில் நடைபெற்ற சோதனையில் 11.52 கிலோ தங்க நகைகளும், 118.506 கிலோ வெள்ளி, கணக்கில் கொண்டு வராத ரொக்கப் பணம் 84 லட்ச ரூபாயும், இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ள கிரிப்டோ கரன்ஸில் 34 லட்சம் ரூபாய்க்கு அளவுக்கு மேலான ஆவணங்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.