தமிழ்நாட்டில் 2.07 கோடி அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு கோவிட் நிவாரண உதவித் தொகையாக ரூ.4000 வழங்கப்படும் என திமுக.வின் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்ற அன்று போட்ட உத்தரவில், மக்களின் வாழ்வாதாரம் காக்க முதல் தவணையாக ரூ.2000 மே மாதமே வழங்கப்படும் என்று அறிவித்தார். அதன்படி, இன்று பிற்பகல் தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்வில், 2000 ரூபாய் வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார். இந்த நிகழ்வில், கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, தலைமைச் செயலாளர் இறையன்பு ஆகியோர் கலந்துகொண்டர்.
இன்றிலிருந்து அனைத்து குடும்ப அட்டைத்தாரர்களுக்கும் நிவாரண நிதி 2000 ரூபாய் வழங்கப்படுகிறது. வீடு வீடாக டோக்கன் வழங்கப்பட்டு, பின்னர் ரேசன் கடைகளில் நிவாரண நிதி வழங்கப்படவுள்ளத.