Mon. Nov 25th, 2024

புதுச்சேரி மாநிலத்தின் புதிய முதலமைச்சராக இன்று காலை என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரெங்கசாமி 4 வது முறையாக பதவி ஏற்றுக் கொண்டார். புதுச்சேரி மாநில வரலாற்றில் இதுவரை தமிழ் தெரிந்த ஆளுநர் ஒருவர் பதவி ஏற்பு விழாவிற்கு தலைமை வகித்தது இல்லை. தமிழரான ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், பதவி பிரமாணத்தை நடத்தி வைத்தது, புதுச்சேரி மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் முழுக்க முழுக்க தமிழ் மொழியில் நடைபெற்றது, தமிழ் மொழிக்கு கிடைத்த பெருமை என்று கூறுகிறார்கள் புதுச்சேரி மாநில தமிழ் ஆர்வலர்கள்.