Mon. Nov 25th, 2024

JUST IN:

பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா உடனான சந்திப்பில் அரசியல் எதுவும் பேசவில்லை என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்..

பிரதமருடனான சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களுக்கு முதல்வர் பேட்டியளித்தார்..அப்போது அவர், தமிழகத்தின் வளர்ச்சி மற்றும் விவசாய நிவாரணம் தொடர்பாகவே பேசினேன் என்று தெரிவித்தார்..தொடர்ந்து, சசிகலா வெளியே வந்தாலும், அதிமுக உடன் இணைய 100% வாய்ப்பு இல்லை என்று கூறிய நிறைவேற்றப்பட்டுள்ள திட்டங்களை திறந்து வைக்க பிரதமருக்கு அழைப்பு விடுத்தோம். அழைப்பை ஏற்றுக் கொண்டு தமிழகம் வருவதாக பிரதமர் தெரிவித்தார் என்று முதல்வர் பழனிசாமி கூறினார்..

இந்தியாவிலேயே உயர்க்கல்வியில் தமிழகம் சிறந்து விளங்குகிறது என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் புதிதாக 11 மருத்துவ கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் சாலை மேம்பாட்டு பணிகள் அதிக அளவில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தமிழகத்தில் தான் அதிக அளவில் கொரோனா வைரஸ் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றும் முதல்வர் கூறினார்