மறைந்த முதல்வரும், பாரத ரத்னா விருது பெற்றவருமான எம்.ஜி.ஆர். 1987 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 24 ஆம் தேதி மறைந்தார். அவர் மறைந்து இன்றோடு 33 ஆண்டுகள் கடந்துவிட்டன. ஆனாலும், இன்றைக்கும் அவர், பல லட்சம் இதயங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறார். திரையுலகில் கொடி கட்டி பறந்ததைப் போல தமிழக அரசியலிலும் அவர் வெற்றிக்கொடி நாட்டினார்.
மறைந்த எம்.ஜி.ஆரின் 104 வது பிறந்தநாள் விழா இன்று தமிழகம் மட்டுமின்றி உலகில் பல நாடுகளில் கொண்டாடப்பட்டு வருகிறது. அவரின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் மோடி, தனது டிவிட்டரில் தமிழில் வாழ்த்துச் செய்தி வெளியிட்டுள்ளார்.
அதன் விவரம் இதோ :
பாரதரத்னா எம்ஜிஆர் பலரது இதயங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறார். திரையுலகிலும் அரசியலிலும் அவர் பரவலாக மதிக்கப்பட்டார். அவர் முதலமைச்சராக இருந்தபோது, வறுமையை ஒழிக்கவும் பெண்களுக்கு அதிகாரம் அளிக்கவும் பல முயற்சிகளைத் தொடங்கினார். அவரது பிறந்தநாளில் எம்ஜிஆருக்கு எனது புகழ் வணக்கம்அவர் முதல்-அமைச்சராக இருந்தபோது, வறுமையை ஒழிக்கவும், பெண்களுக்கு அதிகாரம் அளிக்கவும் பல முயற்சிகளை தொடங்கினார். அவரது பிறந்தநாளில் எம்.ஜி.ஆருக்கு எனது புகழ் வணக்கம்.
இவ்வாறு மோடி அதில் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, அ.தி.மு.க. தலைமைக் கழகத்தில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் மாலையணிவித்து மரியாதை செலுத்தினர்.
மக்கள் நீதி மையத் தலைவர் நடிகர் கமல்ஹாசன், ராமாவரம் தோட்டத்தில் எம்.ஜி.ஆர். உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.