Mon. Nov 25th, 2024

ஆக்சிஜன் தயாரிப்புக்காக ஸ்டெர்லைட் ஆலையை திறப்பது தொடர்பாக, முதல்வர் பழனிசாமி தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம், சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.

ஆக்சிஜன் உற்பத்திக்காக ஸ்டெர்லைட் ஆலை செயல்பட 4 மாதங்களுக்கு மட்டும் அனுமதிக்கலாம் என்று கூறிய முதல்வர் பழனிசாமி ஆக்சிஜன் உற்பத்திக்காக ஸ்டெர்லைட் ஆலை செயல்பட 4 மாதங்களுக்கு மட்டும் அனுமதிக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.

இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி எம்.பி. செய்தியாளர்களிடம் பேசியதாவது ;

நாடுமுழுவதும் கோவிட் தொற்று பரவல், ஆக்ஜிசன் தட்டுப்பாடு கருத்தில் கொண்டு அனைத்து கடசி கூட்டத்தில் திமுக ஏனைய அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் கலந்து கொண்டோம்.
திமுக தலைவர் அறிவுருத்தல் படி ஆக்ஸிஜன் தட்டுப்பாட்டை மனதில் கொண்டு ஆக்ஸிஜன் தயாரிக்க மட்டுமே ஸ்டெர்லைட்டுக்கு அனுமதி தரவேண்டும் என கூறியுள்ளோம்.தாமிரம் உள்ளிட்ட அனைத்து தயாரிப்புக்கும் அனுமதி மறுக்க வேண்டும் .துண்டிக்கபட்ட மின்சாரம் தமிழக அரசு வழங்க வேண்டும் ஆலையை திறக்க கூடாது. கண்காணிப்பு குழு அமைத்து நேரடி கண்காணிப்பில் நடைபெற வேண்டும் இதுதான் எங்களது நிலைப்பாடு. 4 மாத்ததுக்கு மட்டுமே அனுமதிக்க வேண்டும் அதன்பின்னர் மூட வேண்டும் –

இவ்வாறு கனிமொழி கூறினார்.

மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

அனைத்து அங்கீரிக்கப்பட்ட கட்சிகளை கூப்பிட்டிருந்தனர். மற்ற கடசிகளையும் அழைக்க வலியுறுத்தினோம். வேதாந்தா உள் நோக்கோடு செயல்படுகிறது. இதை வைத்து ஆலையை திறக்க முயற்சிக்கிறது. எனவே அரசு கட்டுப்பாட்டில் செயல்படுத்தலாம் என கருத்துக்களை கூறினோம்.

மக்கள் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதால் உச்சநீதிமன்ற கோரிக்கையை ஏற்று ஆக்ஸிஜன் உற்பத்திக்கு மட்டுமே அனுமதிக்க அரசு தீர்மானித்துள்ளது. அரசு சார்பில. ஆக்ஸிஜன் தவிர வேறு உற்பத்திக்கு அனுமதிக்க கூடாது என வலியுறுத்தியுள்ளோம்.
தூத்துக்குடி மக்கள் ஒத்துழைப்போடு நடத்த வேண்டும் எனக் கோரினோம். அரசு பொதுமக்கள் ஒத்துழைப்போடு நடத்துவோம் உறுதியளித்துள்ளது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கூறியதாவது

லட்சக்கணக்கான மக்கள் பாதிப்பு.உயிர்பலி ஏற்படுகிறது.
ஆக்ஸிஜன் பற்றாக்குறையை பயன்படுத்தி உள்நோக்கோடு வேதாந்தா செயல்பட்டு வருகிறது. தமிழக அரசு ஆலை திறக்க அனுமதி வழங்கவில்லை. மத்திய அரசு வேதாந்தாவுக்கு ஆதரவாக நிற்கிறது.
மனிதாபிமான அடிப்படையில் தமிழக அரசால் மாவட்ட ஆட்சியர் குழுவினர் நேரடி கண்காணிப்பில் ஆக்ஸஜன் உற்பத்திக்கு அனுமதி கோரப்பட்டது. உற்பத்தியாகும் ஆக்ஸிஜன் தமிழக தேவைக்கு பயன்படுத்த வேண்டும்.20 லட்சம் தடுப்பூசி உடனடியாக மத்திய அரசு அனுப்ப வேண்டும்.

காங்கிரஸ் சார்பில் முன்னெடுத்து வைக்கப்பட்ட கருத்தை முன்னாள் தமிழக தலைவர் தங்கபாலு கூறியதாவது:

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை தொடர்ந்து நடைபெற நாங்கள் ஒப்புக்கொள்ளவில்லை.
கொரோனாவல் ஆக்ஸிஜன் உற்பத்திக்கு தற்கலிக அனுமதி கோரப்பட்டது. குழு அமைத்து ஆக்ஸிஜன் தயாரிக்க ஒப்புக் கொண்டோம். தமிழக தேவை போக மீதியை பிறமாநிலங்களுக்கு அனுப்பி வைக்க கோரிக்கை வைத்துள்ளோம்.
முக்கியமான காலகட்டம் என்பதால் அரசு முயற்சிக்கு ஆதரவு அளிப்போம்.

அனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்ற கட்சிகளின் ஒப்புதலோடு ஸ்டெர்லைட் ஆலையில் 4 மாதங்களுக்கு மட்டும் ஆக்சிஜன் உற்பத்திக்கு தமிழக அரசு அனுமதி: 5 தீர்மானங்கள் நிறைவேற்றம்:

தீர்மானங்கள்:

மாண்புமிகு உச்சநீதிமன்ற உத்தரவின்படி  தூத்துக்குடி வேதாந்தா நிறுவனத்தில் அமைந்துள்ள பிராண வாயு உற்பத்தி மற்றும் அதைச் சார்ந்த இயந்திரங்களை மட்டும் சீர் செய்து இயக்கி கொள்ள தற்காலிகமாக (நான்கு மாதங்களுக்கு மட்டும்) கோவிட்-19 நோய் தொற்று காலம் முடியும் வரை தமிழ்நாடு மின்சார வாரியம் மூலம் வழங்கப்படும் மின்சாரத்தை பயன்படுத்தி இயங்க அனுமதிக்கலாம். பிராண வாயுவின் தேவையைக் கருத்தில்கொண்டு, நிலவும் சூழ்நிலையின் அடிப்படையில் இந்த காலம் பின்னர் நீட்டிக்கப்படலாம்.  இத்தொழிற்சாலையில் எக்காரணத்தைக் கொண்டும், தொழிற்சாலையின் தாமிர உற்பத்தி உட்பட எந்தவித உற்பத்தியையும், மின்உற்பத்தி அலகையும் எக்காரணம் கொண்டும் திறக்கவோ, இயக்கவோ அனுமதிக்கப்படமாட்டாது. இந்த குறிப்பிட்ட காலத்திற்குப் பின்னர் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் மின் இணைப்பு துண்டிக்கப்படும்.

உற்பத்தி செய்யப்படும் பிராண வாயுவில் தமிழ்நாட்டிற்கே முன்னுரிமை வழங்க வேண்டும். தமிழ்நாட்டின் தேவைபோக அதிகப்படியாக உள்ளதை மட்டும் பிற மாநிலங்களுக்கு வழங்கலாம்.

பிராண வாயு உற்பத்தி செய்யும் பகுதியில், பிராண வாயு உற்பத்தியுடன் நேரடி தொடர்புடைய  தொழில்நுட்ப பணியாளர்கள் மட்டும் உரிய அனுமதி சீட்டுடன் அனுமதிக்கப்படுவார்கள்.  தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை அரசு உறுதி செய்யும்.  எக்காரணத்தைக் கொண்டும் பிராண வாயு உற்பத்தி செய்யும் அலகைத் தவிர வேறு எந்த அலகையும் செயல்பட அனுமதிக்கப்படாது.

தற்காலிக பிராண வாயு உற்பத்தியை கண்காணிக்க தமிழ்நாடு அரசால் மாவட்ட ஆட்சியரின் தலைமையில் ஒரு கண்காணிப்பு குழு அமைக்கப்படும்.    கண்காணிப்பு குழுவில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர், சார் ஆட்சியர், தூத்துக்குடி மாவட்டம்,  தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய தூத்துக்குடி மாவட்ட சுற்றுசூழல் பொறியாளர், பிராண வாயு தயாரிக்கும் தொழிற்சாலை தொழில்நுட்பத்தில் அறிவார்ந்த இரண்டு அரசு அலுவலர்கள், மற்றும் அந்த பகுதியை சார்ந்த பொதுமக்கள்/ சுற்றுசூழல் சார்ந்த அரசு சாரா நிறுவனங்கள் மற்றும் ஆலை எதிர்ப்புக் குழுவினர் ஆகியோரிலிருந்து மூன்று நபர்கள் இக்கண்காணிப்பு குழுவில் இடம்பெறுவர்.  இந்த குழு, பிராண வாயு தயாரிக்கும் முழு பணியையும் மேற்பார்வையிடும் மற்றும் பிராண வாயு தயாரிக்கும் ஆலையை இயக்குவது பற்றி இந்த குழு முடிவெடுக்கும்.  

தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பிராண வாயு தமிழ்நாட்டின் தேவையை பூர்த்தி செய்ய பயன்படுத்த வேண்டும்.  தமிழ்நாட்டின் தேவைக்குப் போக மீதமுள்ள பிராண வாயு பிற மாநிலங்களுக்கு வழங்கலாம்.